கனடா ரொறன்ரோவில் இறையியல் கல்வியில் முதுமானிப் பட்டம் பெற்று 88 வயதுப் பெண்மணியான மோலி சுட்கைடிஸ் தொடர்பான செய்திகள் நாடெங்கும் பரவி வருகின்றன.
கடந்த சனிக்கிழமையன்று டொராண்டோ பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ரெஜிஸ் கல்லூரியில் இறையியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றதன் மூலம். கனடாவில் முதுகலைப் பட்டம் பெற்ற மூத்தவர்களில் ஒருவராக இவர் பெருமிதத்துடன் காணப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மோலி சுட்கைடிஸ் தனது டிப்ளோமாவைப் பெற நான் சென்றபோது, தான் பதட்டமாக இருந்ததாகவும் ஆனால் இந்த பட்டத்தைப் பெறுவதற்கு கடுமையாகக் கற்றதாகவும் எனவே தனது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறினார்.
சுட்கைடிஸ் அவர்கள் ஏறக்குறைய 18 ஆண்டுகளாக, ஒவ்வொரு நாளும், கடிகார வேலைகளைப் போலவே, அவள் காலை 9 மணிக்கு எட்டோபிகோக்கில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி, பேருந்து மற்றும் சுரங்கப்பாதையில் ரெஜிஸ் கல்லூரியின் நகர வளாகத்திற்குச் செல்வார் என்றும் அவரது உயர் கல்வி பல அர்ப்பணிப்புக்களைக் கொண்டது என்றும் அவரது அயலவர்கள் தெரிவித்தார்கள்.
கல்லூரியின் இறுக்கமான சமூகத்திற்குள் அவர் உள்வாங்கப்பட்டிருந்தார் எல்லோரும் அவரை “மோலி” என்று சாதாரணமாகவே அறிந்திருந்தனர். மேலும் ‘அவர் தனது நாட்களின் பெரும்பகுதியை பல்கலைக்கழக நூலகத்தில் கழித்தார் – எப்போதாவது மதியம் நீச்சலுக்காக அருகிலுள்ள கிறிஸ்த்தவ வாலிபர் சங்கத்தின்
பயிற்சிக் கூடத்திற்குச் செல்வார். அத்துடன் பல்கலைக் கழகத்திலிருந்து இரவு 10 மணிக்கே வீடு திரும்புவார்’’ என்று சாதாரணமாகவே அனைவரும் அறிந்திருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்த்ககது.