தற்போது கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தின் சில பகுதிகளில் மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் வீடுகள் சொத்துக்கள் அழிந்து போனமை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவ்வாறான நிலையில் கடந்த திங்கட்கிழமை, பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தை வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் நாசப்படுத்தியபோது, டீன் ஹாப்கின்ஸ் என்பவர் தனது நெருங்கிய நண்பரின் மனைவியிடமிருந்து தனது கணவரைக் காணவில்லை எனக் கூறி ஒரு அதிர்ச்சி தரும் அழைப்பைப் பெற்றார்.
அந்த தொலைபேசி அழைப்பு ஹாப்கின்ஸ்க்கு பல மன அழுத்தம் நிறைந்த நாட்களைத் கொடுத்தது, தொடர்ந்து தனது பழைய ரக்பி நண்பன் ஸ்டீவன் டெய்லர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டபோது கண்ணீர் விட்டு அழுது புலம்பினார்.
வெள்ளச் சகதியில் அகப்பட்டு இறந்த டெய்லர் பி.சி. கட்டுமானப் பணிக்காக ஒரு வருடத்திற்கு முன்பு கல்கரியில் இருந்து பிரிட்டிஸ் கொலம்பியாவிற்கு வந்ததாகவும் கடந்த வார இறுதியில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஆகியவை பாதித்த பகுதிகளில் ஒன்றில் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த போது அவரது மனைவி அவருடனான தொடர்பை ஏற்படுத்தியபோது, அவருக்கு உதவி தேவைப்பட்டதை அவர் உணர்ந்தார் என்றும் ஹாப்கின்ஸ் தெரிவித்தார்.
அவருக்கு கிடைத்த தகவல்களின் அவரது நண்பரான டெய்லர் வான்கூவருக்கு வடக்கே வேலை செய்யும் தளத்தில் இருந்ததாகவும் அங்கு மோசமான வானிலை காரணமாக வேலைத்தளம் மூடப்பட்டதாகவும் எனினும் மோசமான நிலையில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தாலும் நண்பர் டெய்லர் அவர்கள் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார் என்றும் தெரியவந்தது.
ஹாப்கின்ஸ் டெய்லரின் சக ஊழியர்களை அழைக்கத் தொடங்கினார் மற்றும் லில்லூட்டின் தெற்கே ஏற்பட்ட மண்சரிவு பற்றிய நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்து மிகவும் கவனமாகக் கேட்டறிந்தார். டெய்லரைப் தங்கியிருக்கலாம் என்று கருதப்பட்ட் ஹோட்டல்களை அழைத்தார். இதேவேளை. டெய்லரின் மனைவி காணாமல் போனவர் பற்றிய தகவல் வழங்கும் அலுவலகத்தில் தனது கணவர் தொடர்பான விபரங்களை பதிவு செய்தார்.
நாட்கள் கடந்துவிட்டன, அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர், என்றார். ஆனால் பின்னர் ஆர்சிஎம்பி எனப்படும் மத்திய காவல்துறை அதிகாரிகள் புதன்கிழமை பிற்பகுதியில் டெய்லரின் மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து. அவர்கள் மூன்று உடல்களைக் கண்டுபிடித்ததாகவும், அவற்றில் ஒன்று அவர் அளித்த அடையாளங்களுடன் பொருந்துவதாகவும் கூறினார்கள்.
குறிப்பிட்ட விளையாட்டு வீரர் வெள்ளத்திலும் வெள்ளச் சகதியிலும் அகப்பட்டு மரணமடைந்துத தொடர்பாக தகவல் தெரிவித்த ஆர்சிஎம்பி எனப்படும் மத்திய காவல்துறை அதிகாரிகள் மாகாணத்தின் லில்லூட் மற்றும் பெம்பர்டன் இடையே நெடுஞ்சாலை 99 இல் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து, லேக் ரோடு எனப்படும் பாதையின் ஒரு பகுதியில் இருந்து மூன்று ஆண்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக சனிக்கிழமை தெரிவித்தார்கள். கடந்த வாரத்தில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அப்போது நான்காக உயர்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பெண் ஒருவரின் சடலம் கடந்த திங்கட்கிழமை வெகு தொலைவில் பணியாளர்களால் மீட்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது “எங்கள் நகரம் மற்றும் மாகாணம் முழுவதும் நூற்றுக்கணக்கான, இல்லாவிட்டாலும் ஆயிரக்கணக்கான ரக்பி நண்பர்கள், வீரர்கள் இருப்பார்கள், அவர்கள் அதே உணர்வுடன் இருப்பார்கள். அவர் அப்படிப்பட்ட மனிதர்” என்று ஹாப்கின்ஸ் கூறினார், மேலும் டெய்லரின் மனைவியின் பாதிப்பை தாங்கள் நன்கு உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஒருவரை இழப்பதற்கும், குறுகிய காலத்தில் எங்கள் வாழ்க்கையிலிருந்து யாரோ ஒருவர் பறிக்கப்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இவ்வாறான ஓர மனப் பாதிப்பு தான் இவரது மரணத்தின் மூலம் எமக்குக் கிடைத்த ஒரு சஞ்சலமான அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.