குறித்த படகில் பயணித்த மேலும் 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு இன்று (23) காலை விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் அந்த படகு பாதையில் 20 பேர் பயணித்துள்ளனர். அதில், சிலர் நீந்தி கரையைச் சேர்ந்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது. பழைய பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதனால், கிண்ணியா- குருஞ்சாக்குளம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த படகுபாதை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இதை விடவும் அதிகரிக்கும் என அச்சம் கொண்டிருக்கும் பொலிஸார், கடற்படையினருடன் இணைந்து தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் மேலும் இப்படகு விபத்தில் பலர் பலியானதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.