(25-11-2021)
ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுமதிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவினால் வர்த்தமானி அறிவித்தலாக வௌியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இனிமேல் ஜனாதிபதி சட்டத்தரணியை நியமிக்கும் போது குறித்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.