25-11-2021)
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு 09 மணியளவில் வீட்டிலிருந்து மீன் பிடிப்பதற்காகச் சென்ற குறித்த நபர் திரும்பி வராத நிலையில் இவரைத் தேடி அதிகாலை 02.மணிக்கு உறவினர்கள் சென்றவேளை காட்டுபகுதியில் இறந்து கிடந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கெருடமடு. மன்னாகண்டலைச் சேர்ந்த 65 வயதுடைய அழகன் கோபால்ராஜ் என்பவர் என கூறப்படுகிறது.
புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.