]தமிழில் படைக்கப்படும் இக்கால இலக்கியப் படைப்புகள் பெரும்பாலும் ஆன்மிகத்தை தழுவியே அமைகின்றன. அதனால், தமிழ் இலக்கியப் பாட்டையில் ஆளாளுக்கு பாத்தி கட்டிக்கொள்ளும் போக்கு அண்மைக் காலமாக வகைதொகை இல்லாமல் பெருகி வருகிறது.
இந்நிலை அருக வேண்டுமென்றால், தமிழ் இலக்கியவாணர்களிடையே இனம், மொழி குறித்த சிந்தனை பேரளவில் மறுமலர்ச்சி காணவேண்டியது காலத்தின் கட்டாயம்.
பழந்தமிழர் சமைத்த இலக்கியப் படைப்புகளில் காதலும் வீரமும் ஒன்றையொன்று விஞ்சும் அளவிற்கு இணையாக அணி வகுத்து நிற்கும்.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஒருவருக்கொருவர் பொறாமைக் குணம் கொண்டிருந்தாலும் வீர தீரத்தில் பழுதில்லாதவர்கள். ஒருவரை யொருவர் மிஞ்சி நின்றவர்கள்.
குறிப்பாக, திருமாவளவன் என்னும் கரிகால் சோழன், சோழர் குலப் பெருமை அத்தனையையும் தனதாக்கிக் கொண்ட வீர மறவன். அடலேறை யொத்த அவ்வீரன், குமரிக் கடற்கரையில் இருந்து படைதிரட்டி, இமயம்வரை சென்று, தன்னை எதிர்த்தார் அனைவரையும் வீழ்த்தி புலிக்கொடியைப் பறக்க விட்டவன்.
தமிழிக்கிய வரலாற்று ஏடுகளில் படித்தறிந்த இத்தகைய வீரகாவியப் படைப்புகளை, நிகழ் காலத்தில் நம் கண் முன்னே படைத்து தமிழர் என்னும் இனத்தை உலகறியச் செய்த மாவீரர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.
20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 21-ஆம் நூற்றண்டின் தொடக்கத்திலும் அவர் படைத்த வீர காவியத்தைத் தொடர இன்னொரு வீரத்தமிழரை தமிழன்னை படைப்பாளா என்ற ஏக்கம் நெஞ்சத்து அறையை கதகதக்கச் செய்கிறது.
பழந்தமிழர் சமைத்தை வீர தீர காவியங்களில், ஆடவர் மட்டும்தான் போர் முனைக்கு சென்றனர். ஆனால், நிகழ்காலத்தில் பிரபாகரன் என்னும் வீர மறவர் படைத்த போரப்பரணியில் தமிழச்சியரும் களம் புகுந்தனர் என்பது இன்னும் சிறப்புடைத்தது.
இன்று மேலை நாடுகளில் தமிழர் வாழ்வதற்கும் தமிழ் செழிப்பதற்கும் பிரபாகரன் மேற்கொண்ட அரசியலும் இராணுவ நடவடிக்கையும் தலையாய காரணம் எனலாம்.
மேற்கத்திய நாடுகளின் நாடாளுமன்றங்களில் தமிழர் உறுப்பியம் பெறவும், அந்தந்த நிலத்தில் தற்கால தமிழ் இலக்கியம் படைக்கப்படுவதற்கும் ஏடுகள் நடாத்தி தமிழ் வளர்ப்போர் நிலைத்திருக்கவும் பிரபாகரன்தான் மூலம் என்றால் இதை மறுப்பார் யார் இங்கே?
இந்தியா என்னும் நாட்டை உருவாக்கி, முடிந்தவரை ஆண்டுவிட்டு அங்கிருந்து ஆங்கிலேயர் திரும்பியபொழுது, இந்து சமயத்தைப் பின்புலமாகக் கொண்டு ஆரிய சாம்ராஜியம் இந்தியாவில் கட்டி அமைக்கப்பட்டது.
இந்த பார்ப்பனீய சாம்ராஜியம் இந்தியாவில் நிலைகொண்டிருக்கும்வரை, தமிழரும் தமிழும் தலையெடுக்கவே முடியாது. ஆண்ட தமிழர்கள் மீண்டும் தலையெடுக்ககூடாதென்பதில் புதுடில்லி வஞ்சக கோட்டைக் கொத்தலம் விழிப்பாக இருக்கிறது.
நிறையும் குறையும் எல்லாரிடத்தும் எவ்விடத்தும் உண்டு; ஈழப் போர் முள்ளி வாய்க்காலில் இன்று நிலைகுத்தி நிற்பதற்கு ஆயிரம் காரணம் இருந்தாலும் அவற்றுள் தலையாய காரணம் பார்ப்பன குயுத்தி அரசியல்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு கேரள மாநிலத்தின் கடற்கரைதான் உதவியது.
தமிழ் மன்னர்கள் ஆண்டபொழுது சேர மரபினர் ஆண்ட நிலப்பகுதிதான் இன்றைய கேரளம். அந்த பண்டைய சேர மண்ணினர் அனைவரும் இன்று மலையாள மொழியினராக விளங்குகின்றனர்.
உடன் பங்காளி கொலையாளி என்பதைப் போல, மலையாள மொழி பேசுவோர் தமிழர்மீது ஏதொவொரு வகையில் காழ்ப்புணர்வு கொண்டவர்களாகத்தான் இருக்கின்றனர்.
அதனால்தான், தமிழர் சம்பந்தப்பட்ட அத்தனை விவகாரங்களிலும் ஆலோசனை சொல்ல புதுடில்லி தலைவர்கள் அமர்த்திக் கொள்வது மலையாள அதிகாரிகளைத்தான். இத்தாலியில் பிறந்த சோனியாவும் அதையேதான் செய்தார். சோனியாவின் தந்தையும் தந்தையின் தந்தையும் முசோலினியின் இராட்சசப் படையில் பங்காற்றியவர்கள். ஒரு வகையில், சோனியாவும் ஆரிய குலத்தைச் சேர்ந்தவர்தான்.
தமிழர்கள் அதிகமாக வாழும் மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணிபுரியும் உள்நாட்டு அதிகாரிகளும் அலுவலர்களும் பெரும்பாலும் மலையாளிகளாகத்தான் இருக்கின்றனர்.
தமிழர்க்கு நேர் எதிரான மனநிலை கொண்டவர்கள் யாரென்று சோனியா காந்திக்கு தெரிந்திருக்கும் தகவல், அண்டையில் இருக்கும் சிங்கள அதிகாரிகளுக்குத் தெரியாதா என்ன?
காலமும் இயற்கையும் காலமெல்லாம் இப்படியேத் தமிழருக்கு எதிராக இருக்காது; இயற்கையே வலிய வந்து தமிழர்க்கும் தமிழர்தம் நிலத்திற்கும் தமிழர் பேசும் மொழிக்கும் துணை நல்கும் காலம் ஒரு நாள் சமையும். அதற்கேற்ப, இன்னொரு பிரபாகரன் தமிழர் குலத்தில் தோன்றுவார்.
மேதகு பிரபாகரன் அவர்களுக்கு 2021 நவம்பர் 26-ஆம் நாள், 67-ஆவது பிறந்த நாள். இந்த வேளை, மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறதா அல்லது மனதை அழுத்துகிறதா என்று என்னால் உணர முடியவில்லை. அதேவேளை, என் விழித்திரைகளில் படரும் ஈரம், கணினித் திரையையும் மறைக்கிறது.
-நக்கீரன்
கோலாலம்பூர்