Scarborough’s Tamil community celebrates Hon. Raymond Cho’s 30 Years in Elected Public Service
கனடாவில் மக்கள் சேவையாற்றிய தமிழரல்லாத அரசியல்வாதிக்கு தமிழ் மக்கள் ஏற்பாடு செய்துள்ள பாராட்டு வைபவம் ஒன்று நாளை ஞாயிற்றுக்கிழமையன்று கனடாவின் ஸ்காபுறொ நகரில் நடைபெறுகின்றது.
30 வருடங்களுக்கு முன்னர் ஸ்காபுறொவில் நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற மதிப்பிற்குரிய Raymond Cho அவர்கள் தற்பொழுது ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினராகவும் முதியோர்கள் நலன் பேணும் அமைச்சின் அமைச்சராகவும் உள்ளார். கடந்த 30 வருட ங்களாக இவருக்கு இங்குள்ள தமிழ் மக்கள் தங்கள் ஆதரவை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார்கள். எமது தமிழ் மக்களுக்கும் அமைச்சர் மதிப்பிற்குரிய Raymond Cho அவர்கள் தொடர்ச்சியாக சேவையாற்றி வருகின்றார். ஒரு தொலைபேசி அழைப்பிற்கு உடனேயே பதிலளிக்கும் இவரது அலுவலகத்தை தமிழ் மக்கள் ஒரு கோவிலாகவே கருதி வருகின்றார்கள். மதிப்பிற்குரிய Raymond Cho அவர்களுக்கு கனடா உதயன் குழுமம் மற்றும் நண்பன் இணையத்தளக் குழு ஆகியோர் பாராட்டுக்களைத் தெரிவிககின்றனர்.