(மன்னார் நிருபர்)
(27-11-2021)
இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது.
-தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.
-இதன் போது மாலை தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மாவீரர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.