தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கனடிய கிளையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கடந்த 28-11-2021 ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அவர்களுடனான மெய்நிகர் சந்திப்பு ஆரம்பத்திலிருந்து இறுதி வரை எவ்வித இடையூறுமின்றி நடைபெற்றது. அவரிடத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் எழுத்து மூலமாகப் பெறப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அவர்களிடத்தில் கையளிக்கப்பட்டது.
