தமிழர் தேசத்தின் மீதான சிங்கள அரசின் நில அபகரிப்பு உட்பட பல முக்கியமான விடயங்கள் இரு நாள் அமர்வுகளின் போது கலந்தாய்வு செய்யப்படவுள்ளது.
‘தேசமாய் சிந்தித்து நாட்டினை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு இடம்பெற இருக்கின்றது.
எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் இடம்பெற இருக்கின்ற இந்த அமர்வின் தொடக்க நிகழ்வில் சர்வதேச பிரதிநிதிகள் பலரும் பங்கெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர் தேசத்தின் மீதான சிங்கள அரசின் ஆக்கிரிமிப்பு, நில அபகரிப்பு உட்பட பல முக்கியமான விடயங்கள் இரு நாள் அமர்வுகளின் போது கலந்தாய்வு செய்யப்படவுள்ளது.
இணைவழியே இடம்பெற இருக்கின்ற இந்த அமர்வுகளில் பல நாடுகளில் இருந்து மேற்சபை உறுப்பினர்கள், அரசவை உறுப்பினர்கள், வள அறிஞர்கள் என பலரும் பங்கெடுப்பர். ஒவ்வொரு அமைச்சுக்களும் தமது செயற்பாட்டு அறிக்கைகளை சமர்பிப்பர். கருத்துரை, கேள்வி-பதில் நேரடி அமர்வுக்குரிய பண்புகளுடன் இணைவழி அமர்வு இடம்பெறும்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வலைக்காட்சி www.tgte.tv ஊடாக அமர்வின் முக்கிய அம்சங்களை நேரடியாக பொதுமக்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.