(01-12-2021)
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக 110 குடும்பங்களைச் சேர்ந்த 326 நபர்கள் பாதிப்பு.
இதனடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 23 அங்கத்தவர்களும்,புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 122 அங்கத்தவர்களும்,வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 18 நபர்களும்,ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 17 நபர்களும்,மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 46 குடும்பங்களை சேர்ந்த 142 அங்கத்தவர்களும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 அங்கத்தவர்களுமாக 110 குடும்பங்களைச் சேர்ந்த 326 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தற்போதைய காலநிலை தொடர்பான புள்ளிவிபர தகவல்கள் குறிப்பிடுகின்றன.