(3-12-2021
திடீர் மின் தடை காரணமாக கொழும்பு தேசிய வைத்திய சாலையின் சத்திரசிகிச்சை அறையில் சத்திரசிகிச் சைக்கு உட்படுத்தப்பட்ட 8 நோயாளர்களின் சத்திரசிகிச்சைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ள தையடுத்து தேசிய வைத்தியசாலை அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் பல அப்பாவி நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.