ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் என்றும் எம் அருகினில் நீயிருப்பாய் பவானோ
சுருவில் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டு கனடாவில் வசித்து வந்தவருமான
அமரர். சத்தியபவான் சத்தியசீலன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவாஞ்சலி, (தமிழ்வண் படம்பிடிப்பாளரும், தொழில் நுட்ப கலைஞரும்)
திதி: 03-12-2021
ஏழாண்டுகள் நகர்ந்ததையா நீ நிர்மலன் பாதம் அடைந்து ஆர்ப்பாட்டம் இல்லாத வாழ்வை நாம் அணைத்துக்கொண்டோம்
அந்த நாட் தொடக்கம் அமைதியாய் கழிகின்றன பொழுதுகள் உனை இழந்த உறவுகள், நண்பர்கள் ஏக்கத்துடன் எங்கும்….
நீ பாதம் பதித்த ஆலய வீதிகள் விழா மண்டபங்கள் நிதமும் சாய்ந்து நின்ற கட்டடச் சுவர்கள் வீதியோர மரங்கள் பயணித்த பஸ் வண்டிகள் நண்பர்கள் உறவினர்கள் வாகனங்கள்
அனைத்துமே உன்னைத் தேடி அழுகின்றன……..
ஆலயங்கள் தோறும் தோளில் கெமரா சுமந்து சென்று இறைவனின் உற்சவங்களை உலகெங்கும் ஒளிர வைத்த உனக்கு அவனடி சேர நிச்சயம் அருள் கிட்டியிருக்குமடா! நீ கடைப்பிடித்த மௌனத்திற்கான பரிசாக இறைவன் உனை தன்னோடு ஏற்றிருப்பான் உன் பணி அங்கும் தொடர….
உன் இருப்பு தொலைந்த நாளில் உலகம் அழுதது சூழலும் கலைந்தது சுகமான உரையாடலிகள் மௌனித்தன எப்போதும் ஏதாவது ஒரு விடயம் உன் மூளையை வருடும் எந்தத் தவறையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும்……
எல்லாமே கனவாகிப் போய் கானல் நீராகி விட்டதே அழகான முகம் அமைதியான பேச்சு குழந்தை மனம் குறும்பு பேச்சு திக்கெட்டும் சென்று செய்திகள் சேகரித்து அன்றொருநாள் நீயே செய்தியானாய் இன்று விழுகின்ற கண்ணீரை உன் பாதம் சமர்ப்பிக்கின்றோம்…..
என்றும் உன் நீங்கா நினைவுகளுடன் உற்றார், உறவினர், நண்பர்கள்