ஸ்காபுறோவில் ‘இனப்படுகொலைக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு மற்றும் இனப்படுகொலைக் குற்றங்களை தடுப்பதற்கான சர்வதேச தினம்’ நினைவு நாளில் அரிஸ் பாபிகியன் தெரிவிப்பு
உலகில் பல நாடுகளில் இடம்பெறும் இனப்படுகொலைகளை இதுவரை 33 நாடுகள் கண்டித்திருந்தும் தொடர்ந்தும் இவ்வாறான படுகொலைகள் இடம்பெறுவது கவலையளிக்கின்றது. எனவே உலகெங்கும் இடம்பெற்ற மற்றும் நடைபெறுகின்ற இனப்படுகொலைகள் பற்றிய வலிகள் மற்றும் பாதிப்புக்கள் ஆகியவற்றை எமது இளைய தலைமுறையினருக்கும் எடுத்துரைத்து இவ்வாறான கொலைகளும் கொடுமைகளும் தொடர்ந்து இடம்பெறாமல் இருக்க வல்லமை மிக்க உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்’
இவ்வாறு ஸ்காபுறோவில் இடம்பெற்ற ‘இனப்படுகொலைக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு மற்றும் இனப்படுகொலைக் குற்றங்களை தடுப்பதற்கான சர்வதேச தினம்’ நினைவு நாளில் ஒன்றாரியோ மாகாண அரசின் உறுப்பினரும் இனப் படுகொலைகள் தீவிரமாக இடம்பெற்ற ஆர்மேனியன் நாட்டிலிருந்து வந்து கனடாவில் குடியேறியவருமான திரு அரிஸ் பாபிகியன் தெரிவித்தார்.
நாடு கடந்த தமிழீழ் அரசாங்கத்தின் இனப் படுகொலை மற்றும் தொகையான அட்டூழியங்களைத் தடுப்பதற்கான அமைச்சும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் அரிஸ் பாபிகியன் அவர்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நினைவு தின வைபவத்தில் நாடு கடந்த தமிழீழ் அரசாங்கத்தின் இனப் படுகொலை மற்றும் தொகையான அட்டூழியங்களைத் தடுப்பதற்கான அமைச்ர் திரு றோய் விக்னராஜா உட்பட பலர் உரையாற்றினார்கள்..
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.
செய்தியும் படங்களும்; சத்தியன்)