(10-12-2021)
சுவிஸ்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டொமினிக் வர்கலர் மற்றும் அரசியல் துறை செயலாளர் சிடோனியா கபிரியல் அம்மையார் ஆகியோருடனான சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பு இன்று (10) காலை 9. மணிக்கு கொழும்பில் தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.
இச் சந்திப்பின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோ. கருணாகரம், வினோ நோகராதலிங்கம் மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, தற்போது உள்ள அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால நடவடிக்கைகள் பற்றி விளக்க மளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்து தொடர்ந்து உறுதியான ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள நாடான சுவிஸ்லாந்துடன் தமிழ் தரப்பின் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.