விலை அதிகரிப்பு தொடர்பான ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன
நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட கனடியக் குடும்பம் ஒன்றுக்குஅடுத்த வருடம் உணவுக்காக மேலதிகமாக பதினைந்தாயிரம் டாலர்கள் தேவைப்படும் எனவும் எனவே நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் 2022 ம் ஆண்டில் பாரிய
பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.
இவ்வாறு கனடிய பல்கலைக் கழகங்கள் சில மேற்கொண்ட விலை அதிகரிப்பு மற்றும் உணவு உற்பத்தி தொடர்பான ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேற்படி அறிக்கைகள் தற்போது கனடிய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. மேற்படி அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் 2021ஐ விட 2022ல் உணவுக்காக கிட்டத்தட்ட ஆயிரம் டாலர்கள் அதிகமாகச் செலவழிக்கும் என எதிர்பார்க்கலாம். காலநிலை மாற்றம் மற்றும் விநியோகச் செயற்பாடுகளின் சீர்குலைவுகளால் உந்தப்பட்டு, 2022 ஆம் ஆண்டில் உணவு விலைகள் இன்னும் வேகமாக உயரும், குறிப்பாக உணவகங்கள் மற்றும் பால் பொருட்களுக்கு இந்த நிலை ஏற்படும். இது தொடர்பாக நோவா ஸ்கோசியா மாகாணத்தில் உள்ள டல்ஹவுசி பல்கலைக் கழகத்தின் விவசாய மற்றும் உணவுப் பகுப்பாய்வு ஆய்வகத்தின் சமீபத்திய உணவு விலை அறிக்கையின்படி. வெள்ளம் முதல் தீ வரை கோவிட்-19 இன் தொடர்ச்சியான விளைவு வரை, “2021 ஒரு பேரழிவு தரும் ஆண்டாகும்” என்று உணவு விநியோகம் மற்றும் கொள்கையில் முதன்மை எழுத்தாளரும் டல்ஹவுசி பேராசிரியருமான சில்வைன் சார்லபோயிஸ் தெரிவித்துள்ளார்..
12வது ஆண்டு அறிக்கை உணவுப் பொருட்களின் விலைகள் ஒட்டுமொத்தமாக ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை உயரும் என்று கணித்துள்ளது. பால் பொருட்கள் மற்றும் உணவகங்களின் விலைகள், ஆறு முதல் எட்டு சதவிகிதம் போன்ற சில பிரிவுகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓன்றாரியோவின் குல்ப் பல்கலைக்கழகம், சஸ்காட்செவன் மாகாணப் பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட அறிக்கையின்படி, இறைச்சி மற்றும் கடல் உணவுகள் விலையில் இரண்டு சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏனைய வகைகளும் இன்னும் நிலையானதாக இருக்கும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.