ஒன்ராறியோவின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அறிவிப்பு
ரொறன்ரோ பிராந்திய பொலிஸ் அதிகாரி செலுத்திய உத்தியோக பூர்வவாகனம மூன்று வாகனங்களை மோதித் தள்ளியதாகவும் இதனால் ஒரு முதியவர் மற்றும் பெண் பலத்த காயங்களுக்கு உள்ளாகியதாகவும் ஒன்ராறியோவின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை அவென்யூ வீதி மற்றும் செயின்ட் கிளேயர்; வீதி மேற்கு சந்திப்பில் சுமார் இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக மாகாண காவல்துறை கண்காணிப்பு குழு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒன்ராறியோவின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையின் படி, போலீஸ் வாகனம் முதலில் 84 வயதான ஆண் ஓட்டுநர் மற்றும் 79 வயது பெண் பயணியுடன் ஒரு வாகனத்தை மோதியது. இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதன்பின்னர் அந்த போலீஸ் வாகனம் மேலும் இரண்டு வாகனங்கள் மீது மோதியது. அந்த வாகனத்தில் இருந்தவர்களுக்கு அதிஸ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை.
பொலிஸ் அதிகாரி ஓட்டிச் சென்ற வாகனத்தில் பயணித்த மற்றுமொரு அதிகாரியும் இருவரும் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஐந்து புலனாய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோவின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை கூறுகிறது. சம்பவத்தை நேரில் கண்டவர்கள் 1-800-787-8529 என்ற எண்ணில் புலனாய்வாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.