இலங்கையின் வடக்கு பிரதேசத்தில் உள்ள ஆதரவற்ற வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்து வரும் We Feeders அமைப்பினால் பாடசாலை மாணவர்களிடையே Speak for Speechless நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.
அண்மையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவதமிழ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடனர்.
அடுத்த தலைமுறையினரிடையே Animal Love சிந்தனைகளை அதிகரிப்பதற்காகவும், ஆதரவற்ற வாயில்லா ஜீவன்கள் பற்றிய விழிப்புணர்ச்சிகளை நம் சமூகத்தில் விதைப்பதற்காகவும் இவற்றின் பயனாக இனிவருங்காலங்களில் வீட்டு விலங்குகள் தெருக்களில் பசியோடும், விபத்துகளோடும், அங்கவீனங்களோடும், நோய்களோடும் வாழ நேரிடுவதை குறைப்பதற்காகவும் Speak for Speechless We Feeders Awareness Events – school edition நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
We Feeders அமைப்பானது வீடற்ற விலங்குகளுக்கான உணவினை வழங்கி வருதல், வாயில்லா ஜீவன்களுக்கான இலவச மருத்துவ சேவைகள், தெருவோர நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள் போன்றவற்றினை வீடுகளில் வளர்க்க தயாராக உள்ளவர்களிடம் சேர்ப்பித்தல், பாடசாலை, பல்கலைகழகம், இளைஞர் அமைப்புக்கள் மற்றும் சமூகத்திடையே விலங்கு நலன்சார் விளிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்துதல் என இலங்கையின் வட பகுதியில் சேவையாற்றி வருகின்றது.
இணைந்து சேவையாற்ற தயாராகவுள்ள இளைஞர் யுவதிகளை வரவேற்பதுடன் இவர்களது செயல்பாடுகளை சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் தொடர்பு கொள்ளவும் முடியும்.
தன்னார்வலர்களாக இணைந்து பணியாற்றும் இப்படியான இளைஞர்களுக்கு நம் தமிழ் சமூகம் வரவேற்ற வேண்டியதும் ஆதரவளிக்க வேண்டியதும் நம் ஒவ்வொருவரினதும் கடமை.