நம்மில் பலருக்கு “நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி” என்ற கேள்வி மனதினுள் இருக்கும்.
“எண்ணம் போல் வாழ்க்கை “
எண்ணங்கள் எப்படியோ அப்படியே தான் நம் வாழ்க்கையும் இருக்கும்.”நம் எண்ணங்கள்
தூய்மையாக நேர்மறையாக இருக்கும் போது வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி?
*தியானம் செய்தல்.
தியானம் செய்வதால் உடலும் மனதும் சுறு சுறுப்பாக இருக்கும். மனஅமைதியை வளர்த்துக்கொள்ள சிறந்த வழி தியானம் மட்டுமே.
தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்தி நேர்மறை எண்ணங்களை வளர்க்க தியானம் பெரிதும் உதவியாக இருக்கிறது.
*நல்ல சிந்தனை உள்ள மனிதர்களை அருகில் வைத்துக் கொள்ளுதல்.
நம்முடன் நம் அருகில் இருக்கும் மனிதர்ள் பற்றி கவனமாக இருங்கள். தூய நல்ல சிந்தனை உள்ள மனிதர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
இது உங்களிடத்தில் நேர்மறை எண்ணங்களை வளர்க்க இலகுவாக இருக்கும்.
*நல்ல விடங்களை படியுங்கள்.
நீங்கள் படிக்கும் புத்தங்கள் மற்றும் கல்வி என்பன உங்கள் மனதில் நல்ல சிந்தனைகளையும் செயல்களையும் தூண்டுவதாக இருக்க வேண்டும்.
நல்ல விடயங்களை படிப்பதன் மூலம் உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை விதைத்துக் கொள்ளலாம்.
*உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
கற்றுக் கொள்ளுதல் , சிறந்த பயிற்சி மூலம் உங்களை நீங்கள் எப்போதும் வளர்த்துக் கொண்டு
இருங்கள். இதனால் உங்கள் மீது நீங்களே உயர்வான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள முடியும்.
உங்களை வளர்த்துக்கொள்ளுவதன் மூலம் நீங்கள் எப்போதும் உயர்ந்தவராக உணர முடியும்.
*எதிர்மறை மனிதர்களிடம் இருந்து தள்ளி இருங்கள்.
நம் அருகில் இருப்பவர்கள் நம் எண்ணங்களை மாற்றும் சக்தி கொண்டவர்கள். எதிர்மறை
எண்ணங்கள் கொண்ட மனிதர்களை எப்போதும் உங்கள் அருகில் இருந்து தள்ளியே வையுங்கள்.
*மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கினை எப்போதும் கொண்டிருங்கள். இயன்றவரை சமூக சேவைகளில் ஈடுபடல் மற்றவர்களுக்கு உதவி செய்தல் போன்றவற்றை செய்யுங்கள்.
இந்த நல்ல பழக்கவழக்கங்கள் உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள
பெரிதும் உதவியாக இருக்கும்.
*சிறந்த விடங்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் பழைய நினைவுகளை ஞாபகபடுத்திக்கொள்ளும் போது உங்களுடைய நல்ல விடயங்களையும் உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல சம்பவங்களையும் நினைவுபடுத்திக்
கொள்ளுங்கள்.
*உடற்பயிற்சி செய்தல்
தினமும் சரியான நேரத்தில் உடற்பயிற்சி செய்வது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல
உள ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
உடல் பயிற்சி நம்முள் ஆரோக்கியமான எண்ணங்களை வளர்க்க உதவியாக அமையும்.
“எண்ணமும் செயலும் சிறப்பாக இருந்தால் வாழ்க்கையும் சிறப்பாகவே அமையும்”
– இரா. சஹானா