ஒன்றாரியோ மாகாணத்தில் உடனடியாக கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை உடனடியாக எமது கைகளில் எடுத்து செயற்பட வேண்டும் என்ற அறிவிப்பை கடந்த புதன்கிழமையன்று மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்கள் விடுத்துள்ளார்.
இந்த அறிவிப்பின் படி. ஏதிர்வரும் 20ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் எனப்படும் மூன்றாவது தடுப்பூசியைப் பெற அனுமதிக்கிறது என்று மாகாண முதல்வரும் சுகாதார அமைச்சரும் கூட்டாக அறிவித்தனர்.
புதன்கிழமை பத்திரியாளர்களுக்கு விளக்கமளித்த மாகாண முதல்வர் பின்வருமாறு தெரிவித்தார்
“ஏற்கெனவே எமது மக்களுக்கு செலுத்தப்பட்ட முதலிரண்டு தடுப்பூசிகள் சரியான முறையில் செயற்படக் கூடியன. எனினும் பூஸ்டர்கள் திடீரென ஏற்படும் மோசமான விளைவுகளைத் தடுப்பதற்கான சிறந்த வழியாகும். எனினும் வேகமாக அதிகரிக்கும் ஓமிக்ரான் என்னும் மாறுபாடு கொண்ட வைரஸை மழுங்கடிக்க புதிய நடவடிக்கைகளையும் முதல்வர் அறிவித்தார் – “உங்கள் கைகளில் இன்னொரு விஞ்ஞான நடைமுறைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதை முடிந்தளவு பின்பற்றுங்கள். அத்தியாவசியமற்ற சர்வதேச பயணத்தைத் தவிர்க்குமாறு கனேடியர்களுக்கு மத்திய அரசாங்கம் அறிவுறுத்தியதுள்ளதையும் மற்றும் ரொறன்ரோ மேயர் ஜான் டோரி நகரம் அதன் தடுப்பூசி திறனை விரிவுபடுத்தும் என்ற செய்திகள் தனக்கு உற்சாகத்தைக் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இதுவரை எமது சுகாதாரப் பிரிவு கடைப்பிடித்த நடைமுறையான 168 நாட்கள் காத்திருப்பது என்பதை நீக்கி தற்போது. இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்தி 84 நாடகளுக்கு பின்னர் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்றும் மாகாண முதல்வர் தெரிவித்தார்.