கியுபெக்கில் மத அடையாள அங்கியை அணிந்த ஆசிரியை வகுப்பறையிலிருந்து வெளியேற்றப்பட்டதை கண்டித்துள்ள அமைச்சர் ஹசன்
இஸ்லாமியர்களில் பெண்கள் தங்கள் மத அடையாளமாக அணியும் வழக்கத்தை கொண்ட ஹிஜாப் என்னும் அங்கியை அணிந்ததற்காக கடந்த வாரம் தனது வகுப்பறையில் இருந்து நீக்கப்பட்ட கனடாவின் கியூபெக் மாகாண ஆசிரியைப் பதேமே அன்வாரி என்பவரின் கதையை முதன் முதலில் செவிமடுத்த போது கனடாவின் மத்திய அமைச்சரும் இஸ்லாமியருமான அகமட் ஹசன் அவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்ததாகவும் அவர் உடனே கனடா போன்ற ஒரு நாட்டில் இவ்வாறான சம்பவம் ஒன்று நடந்திருக்கக் கூடாது என்று அமைச்சர் தெரிவித்ததாகவும் ஒட்டாவாவிலிருந்து அவரது அமைச்சின் அதிகாரி ஒருவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கனடாவின் பல்கலாச்சார மற்றும் அதன் உள்ளடக்கம் ஆகியவற்றுக்கு பொறுப்பான அமைச்சரான ஹசன் அவர்கள் முன்னர் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சராகப் பணியாற்றியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
“2021 ஆம் ஆண்டில், மக்கள் தங்கள் மத நம்பிக்கைகளால் வேலையை இழக்கும் சூழ்நிலையை நாம் அனுபவிக்கக்கூடாது என்பதே எனது உணர்வு” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில். “ஒரு ஆசிரியை வேலையைச் செய்வதற்கான அந்த பெண்மணியினது தொழில்முறைத் திறனின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும், அவளுடைய மதத்தின் அடிப்படையில் அல்ல.”
கியூபெக்கின் பில் 21 இன் விதிகளின்படி வகுப்பறையில் இருந்து அன்வாரி அகற்றப்பட்ட பிறகு, கடந்த வாரத்தில் பல அரசியல்வாதிகளால் பகிரப்பட்ட கருத்துக்கள் இவையாக இருந்தன.
2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒரு சட்டம் குறிப்பிட்ட சில இடங்களில் பொது ஊழியர்கள் மற்றவர்களின் கண்களுக்குத் தெரியும் மதச் சின்னங்களை அணிவதை தடை செய்கிறது. இந்த சட்டத்தை எதிர்த்து தற்போது நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
இந்த விடயம் தொடர்பாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் கடந்த திங்களன்று கூறியபோது, ”சில நேரத்தில்” சட்டங்கள் தொடர்பான கடுமையான சவால்களுக்கு மத்திய அரசு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் அதனோடு சம்பந்தப்பட்ட சாத்தியமான அம்சங்களை நான் நிராகரிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இஸ்லாமியர்களின் மதம் தொடர்பான பண்பாட்டு அடையாளங்களை அணிவதை நிச்சயமாக, ஆதரிப்பேன். என்றார்.
பிரதமரின் கருத்து தொடர்பாக அமைச்சர் ஹசனிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட நேரத்தில் நிச்சயமாக, இது தொடர்பான வழக்குகள் மத்திய நீதிமன்றங்களுக்கு விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் பிரதமர் அரசின் தலையீட்டிற்கு ஆதரவு தருவாரா கொடுப்பாரா என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்று பிரதமர் பதிலளித்ததாகவும் அமைச்சர் ஹசன் தெரிவித்துள்ளார்.