உலகெங்கமிருந்து தன் நிலப்பரப்பில் கால்பதிக்கும் கற்றறிந்த அறிஞர்களையும் தொழில் வினைஞர்களையும். கடல் தாண்டி வரும் அகதிகளையும் வரவேற்று அவர்களை உபசரித்து இருப்பிடமும் உணவும் வழங்கி அவர்களை தனது தேசத்தின் நிரந்தரப் பிரஜைகளாகவும் உயர்ந்த நிலையில் அமர்த்துவதில் தன்னிகர் இல்லாத தனித்துவமான நாடு கனடா ஆகும்.
இந்த நாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருபவர்களில் எத்தனை பேர் இந்த மண்ணை மதித்து வாழ்கின்றார்கள் என்பதை அறிந்து அவர்களைப் போற்ற வேண்டும். இவ்வாறு கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களில் ஒருவரும் தமிழ் இலக்கண நூல்களை மாத்திரமல்ல. திருக்குறள் என்னும் வாழ்வியல் நூலையும் கற்றுத் தேர்ந்தவருமான கவிஞர் புஷ்பா கிறிஸ்டி அவர்கள் திருக்குறளை மதித்து ஓரு சாதனை செய்துள்ளார்.
உலகெங்கும் உள்ள திருக்குறள் சார்ந்த அமைப்புக்களோடு ◌தொடர்புகளை ஏற்படுத்திய வண்ணம் பல கருத்தரங்குகளிலும் கவியரங்குகளிலும் பங்குபற்றி பல தமிழ் அறிஞர்களால் அறியப் பெற்றவராகத் திகழும் கவிஞர் புஸ்பா கிறிஸ்டி அவர்கள் கனடிய தேசத்தையும் அதன் தேசிய அடையாளமாகவும் கனடிய தேசியக் கொடியில் பதிக்கப்பட்டமாக விளங்கும் மேப்பிள் இலைக்கு மரியாதை செய்யும் வகையில் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்த ஏற்பாட்டின் படி கனடாவில் 59 மணி நேரத்தில் 195மேப்பிள் இலைகளில் 1330 குறள்களையும் எழுதிப் பதித்து சாதனை . செய்த கனடிய தமிழ்ப் பெண்மணி கவிஞர் புஷ்பா கிறிஸ்டி அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில கடந்த 04-12-2021 அன்று உலகெங்கும் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட ஒரு மெய்நிகர் நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சைவ நெறிச் செம்மல் சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்ட நிகழ்வில். பல அறிஞர் பெருமக்கள் பங்குபற்றினார்கள். வரவேற்புரையை திருமதி சுபாஷினி வழங்கினார். பேராசிரியர்கள் டாக்டர் அசோகன் அவர்கள் சம்பத் குமார் அவர்கள். மற்றும்; குறள்நெறிச் செம்மல் ஞானசேகரன் அவர்கள். டாக்டர் புதுவை சரவணன் அவர்கள். டாக்டர் உமாராணி அவர்கள். சாதனைப் பெண்மணி செல்வராணி அவர்கள். கவிஞர் கேஜிஆர். கதிரேசன் அவர்கள் கவிஞர் நாயகி அவர்கள் ஆகியயோர் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேற்படி தனது சாதனை முயற்சி தொடர்பாகவும் அதனை தன்னால் எவ்வாறு சாதிக்க முடிந்து என்பதையும் கனடா உதயன் ஆசிரிய பீடத்தின் உறுப்பினர்களோடு புஸ்பா கிறிஸ்டி அவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட போது வியப்பாக இருந்தது. மரங்களிலிருந்து பழுத்த பின்னர் தலையில் விழுந்த காய்ந்த இலைகள் மீது பல வகையான பேனாக்கள் மற்றும் ‘மார்க்கர்’ கள் ஆகியவற்றால் இலைகளில் ஒப்பற்ற குறள்களை எழுதியபோது சிரமங்கள் இருக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றார் பின்னர் தனது சிரமங்களை தகர்க்கவும் தான் சோர்ந்து விடாமல் இருக்க உற்சாகப் படுத்தியும் ஒத்துழைத்தவர்கள் தனது பிள்ளைகளும் மருமக்களும் தான் என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.
மேலும். இலைகளின்; மேல் அழுத்தமாக எழுத்துக்களை எழுதிப் பதித்த போது .இலைகள்கிழிந்து சேதமடைந்ததாகவும். தொடர்ச்சியாக நான் தூக்கத்தை தவிர்த்து சாதனை முயற்சியில் இறங்கிபோது தனது பிள்ளைகளும் தன்னுடன் ஒத்துழைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.– கனடா உதயன் ஆசிரிய பீடம்