தனது 7வது ஆண்டு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கும் வைபவத்தை நடத்திய Scarborough Frontline Community Centre’
Scarborough Frontline Community Centre’ hosted its 7th Annual Appreciation Event at Amana Event Centre in Scarborough, yesterday. The Executive Director Mrs Vijaya Kula, with the support of the Volunteers and Staff, made this event, very successful.
கனடா ஸ்காபுறொ நகரில் கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக சேவை நோக்குடன் இயங்கிவரும் ‘Scarborough Frontline Community Centre’ தனது 7வது ஆண்டு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கும் வைபவத்தை நேற்று புதன்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள அமனா விழா மண்டபத்தில் சிறப்பாக நடத்தியது.
நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான திருமதி விஜயா குலா தனது பணியாளர்கள் மற்றும் தொண்டர் சேவையாளர்கள் ஆகியோருடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தினார்.
அரசியல் பிரமுகர்கள் ஊடக நண்பர்கள் மற்றும் வர்த்தக நண்பர்கள் மூத்தோர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
–செய்தியும் படங்களும்- சத்தியன்