(மன்னார் நிருபர்)
(18-12-2021)
மன்னார் இந்து மத பீடமும் கலாநிதி மனோகர குருக்கள் நற்பணி மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்த நாவலர் விழாவும் 199 வது ஜனன தின நிகழ்வும் இன்று சனிக்கிழமை(18) காலை 9.30 மணியளவில் மன்னார் சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் இந்து மத பீட தலைவர் செந்தமிழ் அருவி கலாநிதி சிவஸ்ரீ மஹா.தர்மகுமார குருக்கள் தலைமையில்,யாழ்ப்பாணம் நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் முன்னிலையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி அதிபர் ப.பாலபவன்,மற்றும் விருந்தினர்களாக மன்னார் கல்வி வலய இந்து சமய ஆசிரிய ஆலோசகர் ச.றமேஸ்,மன்னார் மாவட்டச் செயலக கலாசார உத்தியோகத்தர் .இ. நித்தியானந்தன் உற்பட அறநெறி பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது நாவலர் விழாவும் 199 வது ஜனன தின நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்ற தோடு, மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகளும் இடம் பெற்றது.
இதன் போது மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு,தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறிப்பாக நாவலர் விருது,கலாநிதி மனோகர குருக்கள் நினைவு விருது, இறைபணியாளர்கள் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.