(மன்னார் நிருபர்)
(20-12-2021)
மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஊடாக (மெசிடோ) வடக்கில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் அடிங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு 20ம் திகதி திங்கட்கிழமை குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ தலைமையில் மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காயாக்குளி கிராமத்தில் இடம் பெற்றது.
நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கடும் மழையினால் வடக்கு மாகாணத்தில் மன்னார், யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, முல்லைத்தீவு,வவுனியா ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட கரையோர மீனவ குடும்பங்கள் மற்றும் அதி கூடிய வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 2000 குடும்பங்களுக்கு தலா 2700 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இதன் ஆரம்ப கட்ட நிகழ்வாக மன்னார் முசலி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காயாக்குளி கிராமத்தில் 50 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டதோடு,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்படவுளயும் குறிப்பிடத்தக்கது.