(மன்னார் நிருபர்)
(23-12-2021)
மன்னாரில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) இன்று வியாழக்கிழமை உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக தொழில் வாய்ப்பை இழந்த மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தலைமன்னார் கிராமம், ஓலைத்தொடுவாய் , சாந்திபுரம் , ஜிம்ரோன் நகர் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கும் அதிகூடிய வறுமைக்கோட்டின் கீழ் உள்ள தெரிவு செய்யப்பட்ட 140 குடும்பங்களுக்கு தலா 2600 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ அவர்களின் பணிப்பில் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் இன்று வியாழக்கிழமை (23) காலை வழங்கி வைத்துள்ளனர்.
குறித்த நிகழ்வில் மன்னார் நகர உதவி திட்டப் பணிப்பாளர் றொகான் , குறித்த பகுதிகளை சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர்கள் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைத்த மையும் குறிப்பிடத்தக்கது.