மடகாஸ்கர் தீவில் கடந்த திங்கட்கிழமை அன்று, முறையாக அனுமதி பெறாமல் சுமார் 130-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, சரக்கு கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் வடகிழக்கு திசையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென கப்பலில் பழுது ஏற்பட்டது. அதனால் கப்பலில் தண்ணீர் புகுந்து கப்பல் மூழ்கத் தொடங்கியது. இந்த எதிர்பாராத விபத்தால், கப்பலில் பயணம் செய்தவர்களில் 39 பேர் கடலில் மூழ்கி இறந்துவிட்டனர். 68 பேரின் நிலை என்னவெனத் தெரியாமல் இருந்துவந்தது. அதையடுத்து, பயணிகளை மீட்பதற்காக மடகாஸ்கர் தீவிலிருந்து மீட்புப்படை கிளம்பியது. அந்த மீட்புப்படையுடன், ஹெலிகாப்டரில் மடகாஸ்கர் அமைச்சர் கேலேவும் உடன் சென்றிருந்தார். இந்த நிலையில், அவர் சென்ற ஹெலிகாப்டர் திடீரெனப் பழுதானது
மீட்பு நடவடிக்கை ஒன்றின்போது ஹெலிகொப்டர் கடலில் விழுந்த நிலையில் மடகஸ்கார் அமைச்சர் ஒருவர் 12 மணி நேரம் நீந்தி உயிர்தப்பியுள்ளார்.
“இது நான் இறக்கும் நேரம் இல்லை” என்று மீட்கப்பட்ட பொலிஸ் அமைச்சர் செர்கே கெல்லே தூக்குப் படுக்கையில் இருந்தபடி தெரிவித்தார்.
அவருடன் ஹெலியில் சென்ற இரு பாதுகாப்பு அதிகாரிகளும் உயிர் தப்பியுள்ளனர். நாட்டின் வட கிழக்கு பகுதியில் பயணிகள் படகொன்று மூழ்கிய நிலையில் இவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த படகு விபத்தில் குறைந்தது 39 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் தாம் திங்கட்கிழமை இரவு 7.30 மணி தொடக்கம் அடுத்த நாள் காலை 7.30 மணி வரை நீந்தி கரையை அடைந்ததாக 57 வயதான கெல்லே தெரிவித்தார். தமக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அதிக குளிரை உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.