(24-12-2201)
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட மீனவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது
ஏ9 வீதி மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். வீதி முடங்கிய நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
இந்திய இழுவைப் படகு மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவனை அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ் மாவட்ட செயலகத்தை வந்தடைந்து முடக்கல் போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் ஏனைய கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கூடாது, கைது செய்த படகுகளைப் விடக்கூடாது போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது