கடந்து போகும் 2021ல். 401,000 நிரந்தர குடிவரவாளர்கள் கனடாவில் தம் புதிய வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்
கனடாவில் வாழும் பழங்குடியினரைத் தவிர, ஏனைய கனடா வாழ் மக்களும் முதலில் வேறு எந்தவொரு நாட்டிலிருந்தோ வந்தவர்கள் என்பது தான் உண்மை. குடியேற்றம் பற்றிய கதை கனடாவின் வரலாற்றில் பல அத்தியாயங்களைக் கொண்டது- கனடாவின் தொற்றுநோய் பரவலுக்குப் பிந்தைய மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும், மேலும் வளமான எதிர்காலத்தை விளக்குவதற்கும், கனடிய அரசாங்கம் 2021-2023 குடியேற்ற நிலைகள் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2021 இல் 401,000 புதிய நிரந்தர குடிவரவாளர்களை வரவேற்கும் இலக்கை அடைந்துள்ளது.
கனடாவிற்கான குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் கௌரவ சீன் இப்ரேசர், இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கின்றார். கனடா தனது இலக்கை அடைந்து 401,000 க்கும் மேற்பட்ட புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை 2021 இல் வரவேற்றுள்ளது கடந்த 1913 ஆம் ஆண்டு முதல் சாதனையை முறியடித்து, கனேடிய வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக புதிய குடிவரவாளர்கள் கனடாவில் தங்கள் புதிய வாழ்க்கையை 2021 ல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
தொற்று நோயின் பல சவால்களை எதிர்கொள்வதற்கு மத்தியில் இந்த வரலாற்று சாதனை குறிப்பாக முக்கியமானது. மூடிய எல்லைகள் முதல் உள்நாட்டு முடக்கங்கள் வரை, உலகளாவிய இடம்பெயர்வு கோவிட் -19 ஆல் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சின் ஊழியர்கள் 2021 ஆம் ஆண்டில் அரை மில்லியன் விண்ணப்பங்களைச் செயல்படுத்தி சாதனை படைத்துள்ளனர். இதை அடைய, கனடிய குடிவரவு அமைச்சகம் தனது வளங்களைச் சேர்த்து இந்த முயற்சியில் வெற்றிகண்டது புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டது மற்றும் மேலும் செயல்முறைகளை இணையவழி மூலம் கொண்டு வந்தது. இந்த மாற்றங்கள் அனைத்தும் கனடாவின் குடிவரவு அமைச்சின் செயற்பாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிதான நிரந்தர மேம்பாடுகள் ஆகும்.
தொற்றுநோயுடன் நாங்கள் தொடர்ந்து போராடுகையில், ஏற்கனவே எங்கள் எல்லைக்குள் இருக்கும் திறமைகளை நாங்கள் அதிகம் பயன்படுத்தினோம். இந்த புதிய நிரந்தர குடியிருப்பாளர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தற்காலிக அனுமதியோடு கனடாவில் வாழ்ந்து வந்தனர். மிக முக்கியமாக, அத்தியாவசியத் தொழிலாளர்கள், சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள், சர்வதேச பட்டதாரிகள் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் புதியவர்களை ரூடவ்டுபடுத்த புதிய திட்டங்களை நாங்கள் தொடங்கினோம். குடும்ப மறு ஒருங்கிணைப்பு என்பது எங்கள் குடிவரவு அமைப்பின் மற்றொரு தூணாகும், மேலும் பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கு நிதியுதவி செய்வதற்கு அதிக குடும்பங்களைச் செயல்படுத்தும் அதே வேளையில், வாழ்க்கைத் துணைவர்களையும் குழந்தைகளையும் மீண்டும் இணைத்தோம். இறுதியாக, பல நாடுகள் அகதிகளுக்கான கதவுகளை மூடிவிட்டதால், கனடாவில் உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நாம் கனடாவில் தங்குமிடங்களை நாங்கள் தொடர்ந்து வழங்கினோம்.
நமது பொருளாதாரத்தை இயக்கவும், நமது சமூகத்தை வளப்படுத்தவும் மற்றும் நமது வயதான மக்களை ஆதரிக்கவும் கனடாவிற்கு குடியேற்றும் செய்வது மிகவும் அவசியம் . கனடாவில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் மூன்றுக்கு ஒன்று குடியேறிய ஓருவருக்கு சொந்தமானது, மேலும் 4 இல் 1 சுகாதாரப் பணியாளர்கள் புதியவர். வணிகம், தொழிலாளர் சந்தைப்படுத்தும் ஆற்றல் கொண்ட வல்லுநர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் அனைவரும் கனடாவில் குடியேறும் சந்தர்ப்பங்களைப் இலகுவில் பெறுகின்றார்கள். , புதிய குடிவரவாளர்களின் வருகை என்பது கனடாவில் புதிய சிந்தனைகளை தோற்றுவிக்கின்றது மற்றும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவுகிறது. புதிய கனடியர்கள் ஒவ்வொரு நாளும் நமது நாடு முழுவதும் உள்ள சமூகங்களுக்குப் பங்களிக்கிறார்கள், மேலும் நாளைய கனடாவை உருவாக்கும்போது புதிய குடிவரவாளர்களை இன்னும் வரவேற்போம்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Canada welcomes the most immigrants in a single year in its history
December 23, 2021—Ottawa—With the significant exception of Indigenous people, all Canadians originally come from somewhere else. The story of immigration fills many chapters in the history of Canada—including the most recent one. To support Canada’s post-pandemic recovery and chart a more prosperous future, the Government of Canada set a target of welcoming 401,000 new permanent residents in 2021, as part of the 2021–2023 Immigration Levels Plan.
The Honourable Sean Fraser, Minister of Immigration, Refugees and Citizenship, today announced that Canada has reached its target and welcomed more than 401,000 new permanent residents in 2021. Surpassing the previous record from 1913, this is the most newcomers in a year in Canadian history.
This historic achievement is particularly significant in the face of the pandemic’s many challenges. From closed borders to domestic lockdowns, global migration has been upended by COVID-19. But the employees of Immigration, Refugees and Citizenship Canada (IRCC) rose to the occasion and processed a record half a million applications in 2021. To achieve this, IRCC added resources, embraced new technology and brought more processes online. These changes are all permanent improvements to Canada’s immigration system.
As we continue to struggle with the pandemic, we made the most of the talent already within our borders. The majority of these new permanent residents were already in Canada on temporary status. Most notably, we launched new programs to engage essential workers, health care professionals, international graduates and French-speaking newcomers. Family reunification is another pillar of our system, and we reunited spouses and children while enabling more families to sponsor parents and grandparents. Finally, with many countries closing their doors to refugees, we continued to offer the world’s most vulnerable shelter in Canada.
Canada needs immigration to drive our economy, enrich our society and support our aging population. One in 3 Canadian businesses is owned by an immigrant, and 1 in 4 health care workers is a newcomer. Business, labour market experts and economists all agree that immigration creates jobs, spurs innovation and helps address labour shortages. New Canadians contribute to communities across our country every day, and we will continue welcoming more of them as we build the Canada of tomorrow.