(மன்னார் நிருபர்)
(26-12-2021)
சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் பேசாலை வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் மன்னார் மாவட்ட கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குனரும், மன்னார் பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ.ரி.லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் நினைவேந்தல் இடம் பெற்றது.
உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று காலை 9.25 குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேசிய கலைஞர் எஸ்.ஏ.உதயன் சுடர் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட மீனவர்கள்,வர்த்தகர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.