கொழும்பு வேத்தியர் கல்லூரியின் (Royal college) கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுக்கும் பொருட்டு, கடந்த 20.12.2021 அன்று இரண்டு Smart boards வழங்கிவைக்கப்பட்டன.
ஐக்கிய இராச்சியத்தினை மையமாகக் கொண்டு இயங்கிவரும் கலாநிதி.நித்தியானந்தா அவர்களுடைய தன்னார்வத் தொண்டு நிறுவனமான Ratnam foundation அமைப்பினரது தமிழ் சமுகத்தின் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளில் ஒன்றான, பாடசாலைகளுக்கு Smart board வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் கொழும்பு றோயல் கல்லூரிக்கு இரண்டு Smart boards வழங்கிவைக்கப்பட்டன.
இச் செயற்பாட்டிற்கு John keells வர்த்தக நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்ததுடன் கலாநிதி.ரேவதி சத்யநாராயணா மற்றும் கல்லூரி பழைய மாணவர் திரு.மரதன் கிருஸ்ணன் திவாகரன் ஆகியோரும் நிதிப்பங்களிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில், கலாநிதி.நித்தியானந்தா அவர்களது வேண்டுகோளிற்கிணங்க, புகழ்பூத்த இரு வேத்தியர்களான திருமிகு.சோமசுந்தரம் ஸ்கந்தகுமார் (அவுஸ்திரேலியாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகரும், George Steuart குழுமத்தின் முன்னாள் தலைவரும்) அவர்களும் பிரிகேடியர்.ஷெவந் குலதுங்க (இராணுவ தலைமையக திட்டமிடற் பணிப்பாளர், ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டே) அவர்களும் கல்லூரி முதல்வர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித்தலைவர்கள் உள்ளிட்ட பாடசாலைச் சமூகத்தினரும் பங்கேற்றிருந்தனர்.