(மன்னார் நிருபர்)
(28-12-2021)
இலங்கை வங்கியின் தலைமன்னார் கிளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (28) காலை 10 மணியளவில் புதிய கட்டிடத்தில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
-இலங்கை வங்கியின் வடமாகாண உதவிப் பொது முகாமையாளர் வி.சிவானந்தன் கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இன் போது விருந்தினர்களாக சர்வமத தலைவர்கள்,தலைமன்னார் கடற்படை தளபதி ஜே.எம்.வி.ஜெயக்கொடி,தலைமன்னார் பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி எச்.எம்.சி.பிரசாத் கேரத்,இலங்கை வங்கியின் வன்னி பிரதேச முகாமையாளர் எஸ்.பரதன் மற்றும் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளை அலுவலகத்தின் முகாமையாளர்கள் வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-இதன் போது புதிய கட்டிடத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமன்னார் கிளை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
-அதனைத் தொடர்ந்து வங்கி நடவடிக்கைகள் வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட தோடு,வாடிக்கையாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.