யாழ்ப்பாண பல்கலைக் கழக புவியியற் துறை முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர் அ. கணபதிப்பிள்ளை கனடாவில் காலமானார் என்ற செய்தியை எமது வாசகர்களோடு பகிர்ந்துகொள்கின்றோம். கனடாவில் தமிழ்ச் சமூக நிகழ்வுகளில் தவறாது பங்கெடுத்து வந்த அமரர் அ. கணபதிப்பிள்ளை. கனடாவில் இயங்கும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் செயற்பாடுகளிலும் தன்னை இணைத்துக் கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
கனடாவிலிருந்து வெளிவரும் தாய்வீடு மாத இதழின் எழுத்தாளர்களுள் ஒருவரான
அ.கணபதிப்பிள்ளை தனது துணைவியார் மற்றும் பிள்ளைகள் இருவர். ஓரு மருமகள் ஒரு பேரக் குழந்தை ஆகியோரைப் பிரிந்து சென்றுள்ளார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நிகழ்வு டிசம்பர் 30, 2021 வியாழக்கிழமை 10: 30 மணிமுதல் 1:30 மணி மணிவரை Chapel Ridge Funeral Home & Cremation Centre(8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) இல் நடைபெற்று, தொடர்ந்து பூதவுடல் Forest Lawn Crematorium (4570 Yonge Street, Toronto, ON, M2N 5L6) என்னும் இடத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு தகனம் செய்யப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலதிக விபரங்களுக்கு: 647 778 0967