(29-12-2021)
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விட நாட்டுக்கு மிக மோசமான அழிவை ராஜபக்ஷவினர் தேடித் தந்துள்ளதாகவும் நாடு வங்குரோத்தானதை ஒரு தசாப்த காலத்தில் மீட்க முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பம் இந்த நாட்டை மிகவும் கடுமையான நிதி நெருக்கடிக்கு இட்டுச் சென்றது என்பது தற்போது உலகுக்குத் தெளிவாகியுள்ளது என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவாகி பல மாதங்களாகியும் முக்கிய அமைச்சுகளுக்கான பொருத்த மான செயலாளர்களை நியமிக்க முடியாமல் போனது.
இதன் மூலம் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல ஜனாதிபதி தயாரில்லை என்பது தெளிவானது எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.