(மன்னார் நிருபர்)
(29-12-2021)
மன்னார் கிறிஸ்ரின் வசந்தி வைரமுத்து வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் கவிஞர் வை.கஜேந்திரன் எழுதிய ‘நிலா’ சிறுவர் கதை நூல் வெளியீட்டு விழா இன்று புதன் கிழமை (29) மாலை 3.30 மணியளவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.
-மன்னார் மாவட்ட சைவக் கலை இலக்கிய மன்றத்தின் தலைவர்,மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் இடம்பெற்ற குறித்த நூல் வெளியீட்டு விழாவில் விருந்தினர்களாக மன்னார் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பி.போல் அமல்ராஜ்,மன்னார் கல்வி வலய ஆரம்ப கல்வி உதவிப் பணிப்பாளர் எஸ்.செல்ரன் யூடிற்,மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் ஆலோசகர் எஸ்.விமலேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது கவிஞர் வை.கஜேந்திரன் எழுதிய ‘நிலா’ சிறுவர் கதை நூல் -மன்னார் மாவட்ட சைவ கலை இலக்கிய மன்றத்தின் தலைவர்,மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
-இதன் போது திணைக்கள அதிகாரிகள்,சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த நூல் சிறுவர் கதைகளை உள்ளடக்கிய மையினால்,குறித்த நூல் நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்கள் ஊடாக வெளியீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.