(29-12-2021)
சிறைக் கைதிகளுக்கு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி இன்று முதல் வழங்கப்படுகிறது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் சிறைகளில் உள்ள 18,453 கைதிகளுக்கு மூன்றாவது தடுப்பூசியாக அதாவது பூஸ்டராக பைசர் தடுப்பூசி வழங்கப்படும்.
கொவிட் 19 தொற்று நோயிலிருந்து பாதுகாக்கவென கைதிகள் மற்றும் சந்தேக நபர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸாக சினோபாம் தடுப்பூசியைச் சிறைச்சாலைகள் திணைக் களம் வழங்கியது.
அதன்படி, மூன்றாம் கொரோனா தடுப்பூசி வழங்கும் முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள வெலிக்கடை, மகசின், கொழும்பு ரிமாண்ட், வடரெக, மஹர மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு இன்று முதல் பூஸ்டர் ஊசி போடப் படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித் துள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஏனைய அனைத்துக் கைதி களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.