இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச விலகப்போவதாகவும் அதற்கு பதிலாக நிதியமைச்சரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதருமான பசில் ராஜபக்ச,பிரதமராக பதவியேற்கப் போவதாகவும் வெளியான செய்தியை இன்னும் மஹிந்தவின் தரப்பு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
எனினும் அவர் பதவி விலகப்போவதாக எதிர்கட்சி கூறிவருகிறது.
அதேநேரம் 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் அரசியலுக்கு அடிப்படையை அமைத்துக் கொடுத்த கொழும்பு அபேயராம விஹாரையின் தலைமை பிக்கு முருத்துட்டுவே ஆனந்த தேரரும் இந்த விடயத்தில் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார்
மஹிந்த ராஜபக்ச தமக்கு தெரியாமல் பதவி விலகமாட்டார் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள ஆனந்த தேரர், அவ்வாறு விலகுமாறு கோரி அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுமானால், அதற்கு இணங்கி பதவி விலகவேண்டாம் என்று மஹிந்த ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.