கனடா உதயன் பத்திரிகையின் வெள்ளி விழா ஆண்டான 2021 க்கு விடை கொடுக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில். ‘உதயன்’ பத்திரிகையின் வளர்ச்சியிலும் வெளியீட்டிலும் ஆதரவு வழங்கி வரும் பல நண்பர்கள் கடந்த சில மாதங்களாக கௌரவிக்கப்பெற்று வருகின்றார்கள்.கடந்து போன இந்த கால் நூற்றாண்டு காலத்தில் எமது உற்ற நண்பர்களாகவும் உடன் பிறவாத சகோதர்களாகவும். இடுக்கன் வரும் வேளைகளில் இயந்திரமாய் ஓடி வந்து உதவும் கரங்களாக இருந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள்.
அவர்களின் சிலர் இப்போது எம்மோடு இல்லை. இவ்வுலகம் இல்லாத இன்னோர் இடத்தில் அவர்கள் இருப்பு உள்ளது என்பது எமது நம்பிக்கை..
இதேவேளை, இன்னும் எம்மோடு தொடர்ந்து பயணிக்கும் நண்பர்கள் அன்பர்கள் அனைவருக்கும் எமது நன்றி
இந்த வரிசையில் கடந்த பல வருடங்களாக எமக்கு துணை நிற்கும் அன்பர். நண்பர். ஆதரவாளர் தாயகத்தில் ‘நாகமுத்து அன் சன்ஸ் வர்த்தகப் பரம்பரம்பரையில் ஒரு வாரிசு. கொம்பியூட்டர் துறை விற்பன்னர்- தற்போது கனடாவில் புகழ்பெற்ற வீடு விற்பனைத் துறை வெற்றியாளர்- திரு ராஜ் நடராஜா அண்மையில் ‘உதயன்’ பத்திரிகையின் அலுவலகத்திற்கு வருகை தந்தபோது அவருக்கு உதயன் வெள்ளி விழா மலர் மற்றும் நன்றி செலுத்தும் அடையாளமாக அன்பளிப்புப் பொதி ஆகியன வழங்கப்பெற்றன.
படங்களில் உதயன் பிரதம ஆசிரியரோடு வீடு விற்பனைத் துறை வெற்றியாளர் ராஜ் நடராஜா நிற்பதைக் காணலாம்.