(மன்னார் ந நிருபர்)
(30-12-2021)
உலகம் முழுவதும் உள்ள மக்கள் புது வருடப் பிறப்பை கொண்டாட தயாராகி வருகின்ற நிலையில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் மன்னார் மாவட்டத்தில் புதுவருட கொண்டாட்டங்கள் விமர்சையாக இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற போதும் மக்கள் பொருட்கள் மற்றும் ஆடைகளை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொருட்களின் விலையேற்றம் உள்ளடங்களாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு கடந்த சில வருடங்களாக முகம் கொடுத்து வந்த நிலையில் மக்கள் புது வருட பிறப்பை கொண்டாடும் வகையில் பொருள் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரித்து உள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆலயங்களில் சிறிய அளவிலான புதுவருட பிறப்பு மற்றும் விசேட நள்ளிரவு திருப்பலி களுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்களை சுகாதார நடைமுறைகளுடன் புதுவருட பிறப்பு கொண்டாட்டங்களில் ஈடுபட சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.