(31-12-2021)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை 2022 ஜனவரி மாதம் மறுசீரமைக்கப்படக்கூடும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் இணக்கம் வெளியிட்டுள்ளார்.
அந்த மாற்றத்தை ஜனவரி 8 ஆம் திகதி நிகழ்த்துவதா? அல்லது 18ஆம் திகதி நிகழ்த்துவதா? என்பது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
முக்கியமான சில அமைச்சுக்கள் கைமாற உள்ளதுடன், புதிய சிலருக்கும் வாய்ப்பளிக்க படவுள்ளது என அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.