யாழ்ப்பாணம் வேலணை மேற்கை பிறப்பிடமாகக் கொண்டவரும், கனடாவில் வசித்துவந்து அமரத்துவமடைந்தவருமான
திருமதி. புவனேஸ்வரி பொன்னம்பலம் (ஔவையார்)
அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு விகிர்தி மார்கழி இருபத்தி மூன்றில்
பூண்டதோர் நற்திதியாம் சதுர்த்திதனில்
நீண்ட புகழ் புவனேஸ்வரி பொன்னம்பலம்
வேலணை முத்துமாரி பதம் அடைந்தார் காண்.
அன்னையே எங்கள் ஆருயுயிர்த்தாயே!
முன்னைய தவத்தின் பேறாய் முகிழ்ந்ததோர் அம்மையே
பின்னையெம் வாழ்வுக்கு வழிகாட்டி நின்ற தெய்வமே
உன்னையே தந்து உயிராய் எமை வளர்த்தீரே
தந்தையை பிரிந்து தவியாய் தவித்திட
தாயும் தந்தையுமாய் தாங்கி நின்றீர் அம்மா
உண்ண நல் உணவெனவே உன் குருதி தன்னை
பாலாக தந்து எம்மை வளர்த்து விட்டீரே
கல்வியில் உயர்ந்திட பிள்ளைகளுக்கு
கல்வியினையும் நற்பண்புகளையும்
ஊட்டி வளர்த்தீர் தாயே
அன்பாய் உரைத்திடும் நல் அறிவுரைகள்
தென்பாய் என்றும் நாளும் இருந்திடுமே
அன்னை மொழி எம் காதினில் ஒலிக்கும்
அம்மா முகம் கண்டால் அகம் குளிர்ந்திடும்
என்னேயுன் கல்விப்புலமையென்று எல்லோரும் வியந்து போற்ற
உங்கள் பணிகளை நீங்களே செய்து
வளமோடும் புகழோடும் வாழ்ந்து மடிந்தீர்களே
செம்மையுற வாழவைத்த எங்கள் அம்மாவை
தெய்வமென நித்தம் வேண்டித் தொழுதிடுவோம்
ஆண்டுகள் பத்து ஓடியே மறைந்தாலும்
அம்மா உன் திருமுகம் எம்மனங்களை விட்டுமறையாது
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அம்மாவின் நினைவோடு வாழ்ந்திடும்
அருமைப் பிள்ளைகள்
கலையரசி பொன்னம்பலம் (மகள்): (647) 787-6270
மாதினி விஜயன் (மகள்): (647) 774-5395
மற்றும் பேரப்பிள்ளைகள்