வாழ்வில் மனிதனின் அறிவியல் ஒரு எல்லைவரையே செல்லும். எமது செயற்பாடுகளுக்கு எல்லாம் இறைவன் ஏதோ ஒரு வகையில் ஒரு சூட்சும நிலை வைத்திருப்பான். இதை கடந்த இரண்டு ஆண்டுகளாக. உலகமே உணர்ந்து கொண்டு இருக்கின்றது. இதுதான் இறைவன் எனும் உயரியநிலை. பொதுவாகவே ஒரு ஆண்டின் மலர்வு பல எதிர்பார்ப்புகளை எமக்கு ஏற்படுத்தும். எமது வாழ்வில் பல திட்டம், எண்ணம் நமக்கு மேலோங்கி கலாநிதி ராம் தேவலோகேஸ்வரக்குரு இருக்கும். இதற்கும் நாம் எம்மாலான உழைப்பை – (துன்னாலையூர் சாரதாபீடம்) ) கொடுத்துச் செயற்பட்டாலும், கிரஹங்களின் ஆகர்ஷண சக்தியும் நமக்கு மிகவும் பலமாக அமைகின்றன. பிறக்கும் 2022ஆம் ஆண்டு முற்பகுதியிலேயே இரண்டு கிரஹப் பெயர்ச்சியும் நிகழ இருக்கின்றது. வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் 22.03.2022 லன்று ராகு, கேது எனப்படும் சாயக் கிரஹங்கள் முறையே இடபராசியில் இருந்து மேடராசிக்கு ராகுவும், விருட்சிகராசியில் இருந்து துலாராசிக்கு கேதுவும், பெயர்ச்சி பெறுகின்றன. அதனை தொடர்ந்து 13.04.2022லன்று குருபகவான். குடும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். இந்த கிரஹ பெயர்ச்சியின் மூலமாக அனைத்து ராசியினர்க்கும் பலாபலன் மாறுபடும். உலக நிலையில், மாற்ற நிலைகள் அமையும். எனவே நாம் அனைவரும் நமது மரபுகளை, கடமைகளை, பாரம்பரியங்களை, மீறாமல் காத்து செயற்படுவதே இயற்கை நிலைக்கு நாம் கொடுக்கும் மரியாதை. அவரவர், தமக்குரிய பாரம்பரிய சம்பிரதாயம், வழிபாடு, கொண்டு நற்செயல் நேர்மை வழுவாத வாழ்வு இவற்றை நெறிப்படுத்தி செயற்பட்டாலே, எல்லோருக்கும் நல்ல இங்கிதங்கள் சிறப்புகள் மேன்மையாக அமையும். இனி உங்கள் ராசிகளுக்கு எப்படி என பார்ப்போம்.
மேடராசி (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்)
மிகவும் நேர்த்தியான குணமும், தெய்வ பக்தியும் மிக அதிகம் கொண்ட மேட ராசியினர்க்கு,
2022ஆம் ஆண்டு சற்று சுமாரானதாகவே அமையும். எனவே சற்று பொறுமை நிதானமுடனேயே செயற்பட வேண்டும். 22.03.2022 அன்று உங்களின் ராசிக்கு ராகு ஜென்ம ஸ்தானம் கேது களத்திர மேஷம் ஸ்தானம் 7ஆம் இடமும் அமைகின்றன. அத்தோடு குரு 13.04.2022 அன்று விரயஸ்தானமாகிய 12ஆம் இடம் அமைகின்றார். எனவே எந்த விடயம் எடுத்தாலும் சற்றுப் பிரச்சினைகள் சிக்கல் நிலைகள் அமையும். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமாக இருக்கும். கடன் சிக்கல், பிரச்சினை என்பன திடீரென அமையும். குடும்ப நிலையில் மனச்சஞ்சலம் தேவையற்ற பிரச்சினைகள் என்பன அமையும். திடீர் சுகயீனம் மருத்துவ செலவு என்பன ஏற்படும். பெண்களுக்கு மனச்சஞ்சல நிலை அதிகமாகிருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலைகள் இருக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் அதிகமான ஊக்கமும், கவனமும் எடுக்க வேண்டும். பொதுவாக உங்களுக்கு 2022ல் சற்றுப் போராட்ட நிலை அதிகமாகவே அமையும். உங்கள் குல தெய்வ வழிபாடும், தவறாக பிதுர்க்கடன் வழிபாடும் மேற்கொள்வது மிகவும் நல்லது பொறுமை நிதானமுடன் செயற்பட்டு உங்கள் நல்ல பலன்களை ஓரளவிற்கு பெற்றுக் கொள்ளுங்கள்.
இடபராசி (கார்த்திகை 2,3,4ஆம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1ஆம் பாதம்)
எளிதில் தன் எண்ணங்களை வெளிப்படுத்தாது, தன்னுடைய முன்னேற்றத்திற்கு அதிகமாக முயற்சிக்கும், இடபராசி அன்பர்கட்கு
2022ஆம் ஆண்டு எல்லா வகையிலும் மிகவும் அனுகூலமாக நற்பலன்கள் அமையும். தொழில் சார்ந்த நல்ல முன்னேற்றம், பணவரவு என்பன மிகவும் சிறப்பாக அமையும் ரிஷபம் நிலைகள் ஏற்படும். புதிய முயற்சிகள், நல்ல வெற்றியைக் கொடுக்கும். குடும்ப நிலை சார்ந்த நன்மைகள் அமையும்.
வெளிநாட்டு பிரயாணங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரிய பலன்களுக்கும் இடமுண்டு. 22.03.2022லன்று அமையும் சாயக்கிரஹ பெயர்ச்சி உங்களின் ராசி நிலைக்கு ராகு 12இல் கேது 6ல் அமைவது, மிகவும் சிறப்பு நிலையே. எதிர்பாராத திடீர் நன்மைகள் அமையும். நீண்டகால சிக்கல் நிலைகள் சுமகமாக அமையும். 13.04.2022அன்று குருவின் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு லாபஸ்தானமாகிய 11ஆம் இடம் அமைவது, எல்லா வகையிலும், மிகவும் சிறப்பான நற்பலன்களைக் கொடுக்கும். அதற்கு ஏற்ப நீங்கள் திட்டமிட்டு நற்பலன்களை பெறலாம். பெண்களுக்கு குடும்ப நிலை சார்ந்த நன்மைகள் அமையும். மாணவர்கட்கு சிறப்பான பலன்கள் ஏற்படும். வீடு, வாகன, சேர்க்கை அமையும். எல்லா நிலையிலும் அதிக நன்மைகள் ஏற்படும். அதற்கு ஏற்ப தர்ம செயல் கொண்டு வெற்றிகாண்க.
மிதுன ராசி (மிருகசீரிடம் 2ம், 3ம், 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ஆம்
பாதங்கள்)
எதையும் சாணக்கியத்தோடு செய்து தன்னிலையை மிகவும் சிறப்பாக காத்து நிற்கும் திறன் கொண்ட மிதுனராசி அன்பர்களே!
உங்களின் ராசி நிலைக்கு 2022ஆம் ஆண்டு ஓரளவிற்கு அனுகூலமாக அமையும் நிலையுண்டு. மிதுனம் 22.03.2022அன்று அமையும், ராகு, கேது,பெயர்ச்சி உங்களின் ராசி நிலைக்கு 11இல் ராகுவும். 5இல் கேதுவும், அமைகின்றன. இவை சிறு சிறு அனுகூலமான நன்மைகள் கொடுக்கும். கேதுவின் 5ஆம் இட சஞ்சாரம், பூர்வீக சொத்துக்கள் சார்ந்த பிரச்சினைகளை கொடுக்க சந்தான விருத்தி தடைகள் அமையும். ராகுவின் 11ஆம் இட சஞ்சாரம் மூத்த சகோதரர்களுடன் சிறு சிறு மனச்சஞ்சலம், பிரச்சினைகளை கொடுக்கும். எனவே அதற்கு ஏற்ப மிகவும் பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். 13.04.2022அன்று அமையும் குருப்பெயர்ச்சி உங்களின் ராசிக்கு தொழில் நிலை சார்ந்த அலைச்சல், வேலைப்பளு, இடமாற்றம் போன்ற பலன்களைக் கொடுக்கும். அதற்கு ஏற்ப தொழில் நிலையில் மிகவும் பொறுமை, நிதானம் கொண்டு செயற்படுவது நல்லது. பொதுவாக எந்த விடயம் எடுத்தாலும் சற்று இழுபறிகளும் தாமத நிலைகளும் அமையும். பெண்களுக்கு சற்று மனச்சஞ்சல நிலைகள் அதிகமாக அமையும். மாணவர்களின் கல்வி நிலையில் ஊக்கம் தேவை. தேவையற்ற வீண் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைகள் இருக்கும். குல தெய்வவழிபாடும் பிதுர்கடன் வழிபாடும் செய்து கொள்வது மிக நல்லது. பொறுமையோடு செயற்பட்டு வெற்றி காண்க.
கடகராசி (புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயிலியம் )
எதிலும் ஒருவித சஞ்சலமான மனநிலையை கொண்டு அவசர முறையினால் பல சிக்கல் எதிர்கொள்ளும் கடகராசியினர்க்கு
2022ஆம் ஆண்டு ஓரளவிற்கு அனுகூல பலன்கள் கொடுக்கும் நிலையுண்டு. 22.03.2022இல் அமையும் ராகு, கேது, பெயர்ச்சியானது, ராகு 20ஆம் இடமும், கேது 4ஆம் இடமுமாக கடகம் உங்களின் ராசி நிலைக்கு அமைகின்றன. ராகுவின் 10ஆம் இடமானது தொழிசார்ந்த அலைச்சல், சிக்கல், நிலைகளைக் கொடுக்கும். பதவிசார்ந்த மாற்றம், சக தொழிலாளர் எதிர்ப்புகள் என்பன இருக்கும். பணவரவு, சற்று மத்திமமானதாகவே அமையும். கேதுவின் 4ஆம் இட சஞ்சாரம், உடல் நிலை சார்ந்த உபாதைகள், தாயார் வழிச் செலவும், தாயாருக்கும் உடல் நிலை உபாதைகள் கொடுக்கும். மற்றும் 13.04.2022இல் அமையும் குருப்பெயர்ச்சி எதிர்பாராத திடீர் நன்மைகள் அதிஷ்ட பலன்கள் என்பன அமையும் நிலையுண்டு. இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் தொழில் சார்ந்த திடீர் நன்மைகள் என்பன அமையும் நிலைகள் இருக்கும். பெண்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமான நன்மைகள் அமையும். குடும்ப நிலை சார்ந்த அனுகூலங்கள் இருக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் சற்று முயற்சியும் ஊக்கமும் எடுக்க வேண்டும். மற்றும் புதிய முயற்சிகளில் சிறு சிறு இழுபறி நிலைகள் அமைந்தாலும், எதிர்பார்க்கும் நிறைவுகளை பெற்றுக் கொள்ள முடியும். பொதுவாகவே 2022ஆம் ஆண்டில் நீங்கள் அனுகூலமான நன்மைகளைப் பெறக்கூடிய பலன்கள் உண்டு. சஞ்சலமற்ற நிலை கொண்டு நற்பலன் பெறுங்கள்.
சிம்மராசி (மகம், பூரம், உத்தரம் 1ஆம் பாதம்)
துணிந்து செயலும், சிந்தனையும், தன்னிலை செயல்நிலை நகர்வும் கொண்ட சிம்மராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 2022ஆம் ஆண்டில் சற்று நிதானமாகவும் பொறுமையாகவும் செயற்பட வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் சிக்கல், இழுபறி நிலைகள் இருக்கும். தொழில் சார்ந்த வேலைப்பளு சற்று சிம்மம் அதிகமாகவே அமையும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை இருக்கும். 22.03.2022அன்று அமையும் ராகு, கேது, பெயர்ச்சி, ராகு 9ஆம் இடம், கேது 3ஆம் என அமைவது ஓரளவிற்கு சிறு சிறு நற்பலன்களை எதிர்பாராது அதிஷ்ட நிலைகளை கொடுக்கும் பலன் இருக்கும். 13.04.2022 அன்று அமையும் குருப்பெயர்ச்சி உங்களின் ராசிக்கு அட்டமஸ்தானம் எனப்படும் 8ஆம் இடம் அமைவது சற்று எதிர்பாராத சிரம நிலைகளைக் கொடுக்கும். உடல் நிலையில் திடீர் சுகயீனம் அமையும். பணவரவு சற்று மத்திமமானதாகவே இருக்கும். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். குடும்ப நிலையில் சற்றுக் குழப்பமான நிலைகள் அமையும். கடன் பிரச்சினைகளில் சிக்கல் இழுபறிகள் அமையும். பெண்களுக்கு சற்று மத்திமமான சுமாரான பலனே இருக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் அதிகமான முயற்சியும், நிதானமான நிலையும் மிக நல்லது. பொதுவாகவே 2022ஆல் ஆண்டில் உங்களில் ஒவ்வொரு செயற்பாட்டிலும் நிதானத்தோடு செயற்பட்டு அனுகூலமான வெற்றிகளைப் பெற முயற்சியுங்கள்.
கன்னிராசி (உத்தரம் 2,3,4ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 1,2ஆம் பாதம்)
மிகவும் அமைதியாக இருந்து ஆளுமையான செயல்களை செய்யும் சாணக்கியம் கொண்ட கன்னிராசி அன்பர்களே!
2022ஆம் ஆண்டு உங்கள் ராசிநிலைக்கு எப்படி அமையும் என எதிர்பார்ப்பீர்கள். ஓரளவிற்கு நல்ல அனுகூலங்களை | பெறக்கூடிய நிலைகள் இருக்கும். 22.03.2022அன்று அமையும் கன்னி | ராகு, கேது, பெயர்ச்சி உங்களுக்கு ராகு 8ஆம் இடமும், கேது 2ஆம் இடமும் அமைகின்றன. ராகுவின் 8ஆம் இடம் உடல்நிலை உபாதைகள், இடையிடையே கொடுக்கும் பலன் இருக்கும். வேலைப்பளு அதிகமிருக்கும். மனநிலை சோர்வு இருக்கும். கேதுவின் 2ஆம் இடம் வார்த்தை பிரயோகத்தின் மூலமாக வீண் சச்சரவுகளை தரும். குடும்ப நிலையில் சிறு சிறு சிக்கல் நிலையிருக்கும். 13.04.2022இல் அமையும் குருப்பெயர்ச்சி எல்லா வகையிலும் குடும்ப மகிழ்வை கொடுக்கும். சுபகாரியம் எதிர்பார்க்கின்றவர்கட்கு அப்பலன் நிறைவானதாக இருக்கும். உறவினர்களின் மூலம் நன்மைகளும் உதவிகளும் கிடைக்கின்ற நிலை இருக்கும். தொழில் நிலை சார்ந்த சிறுசிறு திடீர் நன்மைகள் இருக்கும். புதிய முயற்சிகளிலும் அனுகூலமான நிலைகள் அமையும் பலன் இருக்கும். பெண்களுக்கு நன்மையும் சிறப்பும் அமையும். மாணவர்கட்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எனவே 2022ஆம் ஆண்டில் உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு உரிய பலன் அனுகூலமாக அமைய இடமுண்டு. அதற்கு ஏற்ப குல தெய்வ வழிபாடு பிதுர்கடன், என்பன நிறைவாக செய்து நலம் பெறுக.
துலாம் ராசி (சித்திரை 3,4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதம்)
எடுக்கும் காரியங்களை நேர்த்தியாக செய்கின்ற இயல்பும், எல்லோரையும் வசீகரிக்கும் திறனும், கொண்ட துலாராசி அன்பர்களே!
உங்களுக்கு 2022ஆம் ஆண்டு சற்று மத்திதமான பலன்களே கொடுக்கும் நிலையுண்டு. பொறுமை நிதானமுடன் செயற்படுவதே மிகவும் நல்லது. 22.03.2022அன்று அமையும் ராகு, கேது பெயர்ச்சி ராகு 7ஆம் இடம் அமைவது, குடும்ப துலாம் நிலை சார்ந்த சிறு சிறு சிக்கல், பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைகள் அமையும். கேது ஜென்ம நிலையில் உங்கள் ராசியில் அமைவது அதிக யோசனை, மனச்சஞ்சலம், உடல்நிலை சார்ந்த உபாதை போன்ற பலாபலன்களைக் கொடுக்கும். அதற்கு ஏற்ப மிகவும் பொறுமையுடன் செயற்பட வேண்டும். 13.04.2022அன்று அமையும் குருப்பெயர்ச்சி உங்களின் ராசி நிலைக்கு ரோகஸ்தத்தானம் எனப்படும் 6ஆம் இடம் அமைவது மறைமுக எதிர்ப்புகள் அமையும். அத்தோடு காரியத் தடைகள், உடல் நிலை சார்ந்த சிறு சிறு உபாதைகள் என்பன இருக்கும். எனவே எதையும் அவசரம் இன்றி அமைதியாக செயல்பட்டுக் கொள்வதே மிக மிக நல்லது. பெண்களுக்கு மனச்சஞ்சலம், சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும். மாணவர்கள் ஊக்கமும், முயற்சியும் மேற்கொள்வது மிகமிக நல்லது. எதையும் தாங்கும் மனநிலை, தெய்வபக்தி உங்களின் பலமாகும். குலதெய்வ வழிபாடு பிதுர்கடன் என்பன நிறைவாக செய்து நல்ல அனுகூல பலன் பெற்றுக்கொள்க.
விருட்சிகராசி (விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
எல்லா விடயத்திலும் ஆற்றல், அறிவு கொண்ட போதும் அதிகமான மனக்குழப்பம், கொண்ட விருட்சிக ராசி அன்பர்களே!
உங்களுக்கு 2022ஆம் ஆண்டு சிறப்பான நற்பலன்கள் அமையும் நிலையுண்டு. தொழில் நிலையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பணவரவு மிகவும் திருப்திகரமானதாக அமையும். எடுக்கும் முயற்சிகளிலே நல்ல விருச்சிகம் அனுகூலமான வெற்றிகள், அமைந்திருக்கும். 22.03.2022 அன்று அமைகின்ற ராகு, கேது பெயர்ச்சியானது, உங்களுக்கு ராகு 6ஆம் இடம் அமைவது எதிர்பாராத திடீர் நன்மைகளும், அனுகூலமான அதிஷ்ட பலனும் அமையும் நிலைகள் உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படும். அதேபோன்று கேதுவின் 12ஆம் இட சஞ்சாரம், பூர்வீக சொத்து சேர்க்கை , ஆன்மீக யாத்திரை, சுபகாரிய அனுகூலங்கள் என்பன அமையும். 13.04.2022அன்று அமையும் குருப்பெயர்ச்சி உங்களின் ராசி நிலைக்கு பஞ்சமஸ்தானமாகிய 5ஆம் இடம் அமைவது எதிர்பாராத நற்பலன்களைக் கொடுக்கும், குடும்பநிலை மகிழ்வும், சிறப்பும் அமையும். தொழில்நிலை சார்ந்த முன்னேற்றங்கள் இருக்கும். பணவரவு மிகவும் திருப்திகரமானதாக அமையும். பெண்களுக்கு முன்னேற்றகரமான பலனும், நன்மைகளும் அமைகின்ற நிலை இருக்கும். மாணவர்களின் கல்வியில் சிறப்பான முன்னேற்றங்கள் அமையும். எனவே இந்த 2022ஆம் ஆண்டு உங்களுக்கு எல்லா நிலையிலும், நன்மையே அதற்கு ஏற்ப செயற்பட்டு வெற்றிபெறுக.
தனுராசி (மூலம், பூராடம், உத்தராடம் 1ஆம் பாதம் )
தன் போக்கான செயற்பாடு அதிகமாக கொண்டும் எதையும், சிந்திக்காது செய்யும் குணமும், கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
உங்களின் ராசி நிலைக்கு 2022ஆம் ஆண்டு ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் கொடுக்கும். எதையும் திட்டமிட்டு செய்வதில் சற்று குழப்ப நிலைகள் அமையும். வேலைப்பளு மிகவும் அதிகமாக அமையும். 22.03.2022 அன்று தனுசு அமையும் ராகு, கேது, பெயர்ச்சி 5இல் ராகுவும், 11இல் கேதுவும், அமைகின்றன. இதன்மூலம் குடும்ப நிலையில் சிறு சிறு சிக்கல் நிலைகள் இருக்கும். பூர்வீக சொத்துச் சார்ந்த வழக்குகள் அமையும். இதனால் தேவையற்ற அலைச்சல் நிலை பிரச்சினை இருக்கும். கேதுவின் 11ஆம் இடம் திடீரென சிறு சிறு நன்மைகள் கொடுக்கும். 13.04.2022அன்று அமையும் குருவின் சஞ்சாரம், உங்களின் ராசிக்கு சுகஸ்த்தானமாகிய 4ஆம் இடம் அமைவது, மனச்சஞ்சல நிலை அதிகமாக இருக்கும். பணவரவு சற்று மத்திமமானதாகவே அமையும். கொடுக்கல், வாங்கலில் சிக்கல், இழுபறி நிலைகள் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலையிருக்கும். குடும்ப நிலையிலும் குழப்ப நிலை இருக்கும். தாயார் வழியில் திடீர் செலவீனங்கள் அமையும். பெண்களுக்கு சற்று மத்திமமான பலன்களே அமையும். மாணவர்களின் கல்வி நிலையில் அனுகூல நிலையிருக்கும். உங்களின் ராசிக்கு ஏழரைச்சனி கடைக்கூற்று சஞ்சாரம் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. எனவே 2022இல் மிகவும் பொறுமை, நிதானமுடன் செயற்படுவதோடு குலதெய்வ வழிபாடு, பிதுர்கடன் வழிபாடு மிக மிக நல்லது. அதற்கு ஏற்ப செயற்பட்டு வெற்றிகள் பெறுக!
மகரராசி (உத்தராடம் 2,3,4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ஆம் பாதம்)
மனநிலையில் எப்போதும், ஆழமான சிந்தனையும், எதையும் தைரியமாக செய்யும் குண இயல்பும், கொண்ட மகர ராசி அன்பர்களே!
உங்களின் ராசிக்கு 2022ஆம் ஆண்டு சற்றுப் போராடியே ஜெயிக்க வேண்டும். எந்த விடயம் எடுத்தாலும் சற்று பிரச்சினைகளும், தடை, தாமத, இழுபறி நிலைகளும் தொடரும். மகரம் தொழில் நிலை சார்ந்த வேலைப்பளு மிகவும் அதிகமாக அமையும். தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை அமையும். பணவரவு சற்று மத்திமமாகவே அமையும் நிலையிருக்கும். எதையும் மனநிறைவோடு செய்யும் நிலை அமைவதில் சிரமநிலை இருக்கும். உடல் நிலைசார்ந்த உபாதைகள், தொழில்நிலை சார்ந்த பிரச்சினைகள், என்பன அதிகமாக இருக்கும். உங்களின் ராசிக்கு 22.03.2022 அன்று அமையும் ராகு, கேது, பெயர்ச்சியானது ராகு 4ஆம் இடம், கேது 10ஆம் இடம் என அமைவது, இப் பலன்களுக்கு காரணமாகின்றது. 13.04.2022 அன்று குருவின் சஞ்சாரம் 3ஆம் இடம் அமைவது. சிரமமான பலன்களே கொடுக்கும். குடும்ப நிலையில், தொழில் நிலையில், உடல் நிலையில், என பல வகையில் சிரமமான பலன்கள் இருக்கும். உங்களின் ராசிக்கு ஏழரைச்சனி ‘ஜென்மச்சனி’ நடுக்கூற்று சஞ்சாரமும், நடைபெறுகின்றது. எனவே புதிய முயற்சிகளில் கொடுக்கல், வாங்கலில் மிக நிதானமாக செயற்படுவதே அனுகூலமாக அமையும். குலதெய்வ வழிபாடு, பிதுர்கடன் வழிபாடு என்பன தொடர்வது மிகவும் நல்லது. 2022இல் உங்கள் நடைமுறையின் மூலமாக நற்செயல் புரிந்து நன்மை அடைக.
கும்பராசி (அவிட்டம் 3, 4ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3ஆம் பாதம்)
எல்லாவிடயத்திலும் நிறைவாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணம் அதிகம் கொண்டு செயற்படும் கும்பராசி அன்பர்களே!
உங்களுக்கு 2022இல் ஓரளவிற்கு அனுகூலமாக பலன்கள் அமையும் நிலையுண்டு. 22.03.2022 அன்று உங்கள் ராசிக்கு ராகு 3ஆம் இடமும், கேது 9ஆம் இடமும் அமைகின்றன. இந்த கிரஹ பெயர்ச்சியானது, திடீர் நன்மைகள், எதிர்பாராத சிறப்புகள் என்பன கொடுக்கும். தொழில் நிலை சார்ந்த முன்னேற்றம், இருக்கும். தொழில் சார்ந்த இடமாற்றங்களும் அமையும் நிலை இருக்கும். கேதுவின் 9ஆம் இடம் திடீர் சொத்துச் சேர்க்கை, வாகன யோகம் கொடுக்கும். பொதுவாக உங்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவிற்கு நிறைவேற்றக்கூடிய நிலைகள் அமையும். 13.04.2022 அன்று அமையும் குருப்பெயர்ச்சி உங்களின் ராசி நிலைக்கு தனஸ்தானமாகிய 2ஆம் இடம் அமைவதும், குடும்பநிலை சார்ந்த நன்மைகளைக் கொடுக்கும் நிலையிருக்கும். உறவினர்களின் மூலமாக நன்மைகள் அமையும். கடன் நிலைகளில் சுமகமான பலன்கள் இருக்கும். ஓரளவிற்கு எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் அமையும். இருப்பினும் ‘ஏழரைச்சனி’ முதற்கூற்று சஞ்சாரம் இடையிடையே எதிர்பாராத திடீர் பிரச்சினைகளையும், கொடுக்கும், நிலை இருக்கும். குல தெய்வ வழிபாடு பிதுர்கடன் வழிபாடு என்பன மிகவும் நல்லது. உங்களின் செயல்பாட்டை தர்ம சிந்தனையோடும், நேர்மையாகவும் கொண்டு செயற்படுத்தி 2022இல் அனுகூலமான நன்மைகள் பெறுங்கள்.
மீனராசி (பூரட்டாதி 4ஆம் பாதம், உத்தரட்டாரதி, ரேவதி)
மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றமும், செயலும் கொண்ட மீனராசி அன்பர்களே!
உங்களின் ராசி நிலைக்கு 2022ஆம் ஆண்டு சற்று மத்திமமாகவே அமையும் நிலையுண்டு. அதற்கு ஏற்ப மிகவும் பொறுமை நிதானமுடன் செயற்படுவது நல்லது. 22.03.2022இல் அமையும் ராகு, கேது, பெயர்ச்சி உங்களின் ராசி நிலைக்கு ராகு 2ம் இடமும் கேது 8ம் இடமும் அமைகின்றன. மீனம் இதன் மூலமாக மனநிலையில் சஞ்சலங்கள், தேவையற்ற பிரச்சினைகள், தொழில் சார்ந்த சிக்கல் நிலைகள், கடன் நிலைப் பிரச்சினைகள், என்பன தொடரும் நிலையிருக்கும். எனவே அதற்கு ஏற்ப உங்களின் பொறுமையான செயற்பாடு வேண்டும். 13.04.2022அன்று அமையும் குருப்பெயர்ச்சி உங்களின் ராசிக்கு ஜென்மஸ்தானம் எனப்படும் உங்கள் ராசியில் அமைவது, மந்தமான பலாபலன்களையே கொடுக்கும் நிலையிருக்கும். உடல் நிலை சார்ந்த சிறு சிறு உபாதைகள் இருக்கும். தேவையற்ற எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய நிலை அமையும். எனவே எல்லா நிலையிலும், மிகவும் பொறுமை நிதானமுடன் செயற்படுவது நல்லது. குடும்ப நிலையில் சுபகாரிய நிலைகளில் தடைகள், இழுபறிகள் இருக்கும். பெண்களுக்கு மனச்சஞ்சல நிலைகள் அதிகமாக இருக்கும். மாணவர்கள், கல்வி, நிலையில் அதிகமான கவனம் எடுக்க வேண்டும். குல தெய்வ வழிபாடு பிதுர்க்கடன் வழிபாடு என்பன மிகவும் நன்மை தரும். அதற்கு ஏற்ப செயற்பட்டு 2022இல் நற்பலன் பெறுவதற்கு செயற்படுங்கள். (தொடரும்)