கொழும்பில் நேற்று 4ம் திகதி நடைபெற்ற மாபெரும் வர்த்தக விருது வழங்கும் வைபவத்தில் கௌரவிக்கப்பெற்ற சில வர்த்தக நிறுவனங்களில். இலங்கையின் சிறந்த உணவு உற்பத்தி நிறுவனத்திற்கான உயர் விருதினைப் பெற்று தமிழர் நிர்வாகத்தில் இயங்கும் அபிதா தயாரிப்புக்கள் நிறுவனம் அனைவரதும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளது என எமது கொழும்புச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.
முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கெளரவ சமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த விருது விழாவில் 2021 ஆம் ஆண்டின் சிறந்த உணவு உற்பத்தி நிறுவனமாக Abitha Products தனியார் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
Abitha Products தனியார் நிறுவனத்துக்கான விருதினை நிறுவனத்தின் தலைவரான பெருமாள் ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார். விருதினை பெற்றுக்கொண்ட அவர் அது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
அயராத முயட்சியும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக எமது நிறுவனம் வழங்கி வந்த தரமான சேவையும் உற்பத்தியுமே எம்மை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.
இந்த விருதும் கெளரவமும் எமக்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் தந்துள்ளது. எமது இந்த வெற்றிக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பக்கபலமாக இருந்த நிறுவனத்தின் சகல ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.