(04-01-2022)
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு அமைய உடன் அமுலாகும் வகையில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுசில் பிரேமஜயந்த அண்மைய நாட்களாக அரசாங்கத்தின் பல முயற்சிகளை விமர்சித்து வந்தார்.
இந்நிலையில், அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி கூறியிருந்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே, உடன் அமுலாகும் வகையில் ஜனாதிபதி சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கம் செய்துள்ளார்.