கனடாவில் எந்தெந்த நகரங்கள் புதிய குடிவரவாளர்களால் விரும்பப்படுகின்றன என்ற விபரங்கள் வெளியாகியுள்ளன என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
கனடாவின் புள்ளியியல் துறை இந்த விடயத்தில் செய்த ஆய்வு ஒன்றின் பிரகாரம் , கனடாவின் வன்கூவர், ரொரன்றோ மற்றும் எட்மண்டன் ஆகிய நகரங்களையே புதிய குடிவரவாளர்கள், அங்கு நீண்ட நாட்கள் தங்கியிருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
புதிய குடிவரவாளர்கள் எங்கு அதிகம் தங்க விரும்புகிறார்கள் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளுதல், புதிய குடிவரவாளர்களை நாட்டுக்கு வரவேற்பதற்கான கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு விடயத்தில் தற்போது கனடிய அரசின் பல்வேறு அமைச்சுக்கள் செயலாற்றி வருவதாகவும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
மக்கள் பயணிக்கும் இடங்கள், அங்கு அவர்கள் எந்த கடைகளுக்கு செல்கிறார்கள், என்ன பொருட்கள் வாங்குகிறார்கள் என்பது போன்ற தரவுகளின் அடிப்படையில், எந்தெந்த இடங்கள் புலம்பெயர்வோரை கவர்கின்றன என்பதையும், அவர்கள் சென்ற இடங்களில் தொடர்ந்து நீண்ட காலம் தங்குவதா அல்லது அங்கிருந்து வேறிடத்துக்குச் சென்றுவிடுவதா என்பது போன்ற விடயங்களை எந்தெந்த காரணிகள் தீர்மானிக்கின்றன என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
கனேடிய புள்ளியியல் துறை, இது குறித்து சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், எந்தெந்த நகரங்கள், மாகாணங்களில் கனடாவிற்கு வரும் புதிய குடிவரவாளர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன. குறிப்பாக 2014ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் இந்த ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
வான்கூவர், ரொரன்றோ மற்றும் எட்மண்டன் ஆகிய நகரங்களிபுதிய குடியேற்றவாளர்கள் நீண்ட காலம் வாழ விரும்புதாக தெரியவந்துள்ளது.
நகர அளவில் பார்க்கும்போது, வான்கூவருக்கு குடிபெயர்ந்த புலம்பெயர்ந்தோர், அங்கு நீண்ட காலம் வாழ்ந்துள்ளார்கள். உதாரணமாக, 2014இல் வான்கூவருக்கு 100 பேர் புதிய குடியேற்றவாளர்களில் , அவர்களில் 86 பேர், 2019 வரை, அதாவது ஐந்து ஆண்டுகள் அங்கேயே தொடர்ந்து வாழ்ந்துவந்துள்ளது தெரியவந்துள்ளது.
வான்கூவருக்கு அடுத்தபடியாக, ரொரன்றோவில் புலம்பெயர்ந்தோர் நீண்ட காலம் வாழ்ந்துள்ளார்கள்.
அதற்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்பிய நகரம் எட்மண்டன்!
குடும்ப உறுப்பினர்களால் ஸ்பான்சர் செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர், மற்ற பிரிவு புலம்பெயர்ந்தோரைக் காட்டிலும் அதிக காலம் தாங்கள் குடிபெயர்ந்த நகரங்களிலேயே தங்குகிறார்கள்.
புதிய குடியேற்றவாளர்களில் அநேகர் பெரும்பாலும் தாங்கள் வாழிட உரிமம் பெறும் முன் எங்கு வேலை செய்தார்களோ, அந்த மாகாணத்தில் தங்குகிறார்கள்.
கனடாவில் கல்வி கற்ற அனுபவமும், வேலை செய்த அனுபவமும் புலம்பெயர்ந்தோர் தாங்கள் எந்த இடத்துக்கு செல்வது என்பதை முடிவு செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன.
அத்துடன், புதிய குடியேற்றவாளர்களில் எந்த இடத்தில் வேலை செய்கிறார்கள் என்னும் விடயம், அவர்கள் எந்த இடத்தில் நீண்ட காலம் தங்கியிருக்கிறார்கள் என்பதை முடிவு செய்யும் முக்கிய விடயமாக உள்ளது.
மொத்தமாக பார்க்கும்போது, பெரும்பாலானபுதிய குடியேற்றவாளர்களில், தாங்கள் எந்த இடத்துக்கு முதலில் குடிபெயர்ந்துவந்தார்களோ அந்த இடத்திலேயே தங்கிவிடுகிறார்கள் என்று கூறலாம்.
(By- Arjune)