கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நேற்று தொடக்கம் மாகாண அரசாங்கத்தால் அறிவிக்கப்பெற்ற தொற்றுநோய் காரணமான வர்த்தக மையங்கள் மற்றும் பாடசாலைகள் மூடல் காரணமாக பாதிக்கப்படவுள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது போன்று நிதி உதவிதகள் மற்றும் சலுகைகள் ஆகிய உதவிகளை ஒன்ராறியோ அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றும் ஆனால் அவசர உதவி மற்றும் எதிர்காலத்திற்கான திட்டம் விரைவில் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றும் தொழில்துறை
வழக்கறிஞர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்
ஓன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்கள் கடந்த 3ம் திகதி திங்களன்று ஓமிக்ரான் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து மற்றொரு சுற்று பொது சுகாதார நடவடிக்கைகளையும் மூடல் நடவடிக்கைகளையும் அறிவித்தார், இதில் 21 நாள் உட்புறத்தில் உணவு உட்கொள்ளுதற்கு தடை, மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள் மற்றும் பிற இடங்களை மூடுதல் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு சேவைகளுக்கான நாட்களை அல்லது மணித்தியாலங்களைக் குறைத்தல் ஆகியன அடங்குகின்றன.
புதிய கட்டுப்பாடுகளுடன், கடந்த மாதம் அறிவித்த ஆதன வரி மற்றும் எரிசக்தி செலவு தள்ளுபடி திட்டத்திற்கான தகுதியானவமர்களை தெரிவு செய்வதிலும் சிரமங்கள் காணப்படுவதாகவும் மாகாண அரசின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் ஒன்றாரியோ மாகாண முதல்வரால் நேற்று விடுக்கப்பட்ட அறிவிப்பால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கான உதவிகள் அல்லது சலுகைகள் அல்லது அரச மானியங்களுக்கான சாதகமான வாய்ப்புக்களை உருவாக்குவது உட்பட ஒன்றாரியோ மாகாணத்தில் இயங்கிவரும் வர்த்தக நிறுவனங்களுக்கான கூடுதல் நிதி உதவிகளுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்த நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம் என்று ஒன்றாரியோ மாகாணத்தின் நிதி அமைச்சர் பீட்டர் பெத்லென் அவர்கள் ஊடக மற்றும் செய்தித் தொடர்பாளர் எமிலி ஹோக்வீன் செவ்வாயன்று ஊ;டகங்களின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக வர்த்தக நிறுவனங்களின் சபையின் பிரதிநிதி ஒருவர் கருத்து தெரிவிக்கையில். எங்களிடம் உடனடி உதவிகளை வழங்க நிதி வசதிகள் இல்லை என்று மாகாண அரசு தெரிவித்தால் அது வெட்கக்கேடானது என்று தெரிவித்தார் கடந்த ஆண்டு ஒன்றாரியோ அரசு மாகாணத்திற்குள் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு இரண்டு தடவைகள் 10,000 டாலர்கள் தொடக்கம் 20,000 டாலர்கள் வரை ரொக்கப் பணம் வழங்கியதை ஒப்புக்கொண்ட மாகாணத்தின் நிதி அமைச்சர் மேற்படி நிதி உதவித் திட்டத்தை அரசாங்கம் விரைவில் மீண்டும் திறந்திருக்க வேண்டும் என்றும் ஆனால் கடந்த தடவை ஒன்றாரியோ மாகாணத்தில் கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் மேற்படி நிதி உதவித் திட்டத்தின்படி மாகாண ஆயிரக்கணக்கான எவ்வித தகுதியற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு தவறுதலாக 210-மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டது என்று தெரிவித்ததையும் நிதி அமைச்சர் நினைவூட்டினார்
கணேஸ்