(மன்னார் நிருபர்)
(06-01-2022)
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைக்கப்படவுள்ள ‘மடு மாதா’ வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (6) காலை 10 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.
-மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு சகல வசதிகளுடன் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்படவுள்ள குறித்த வைத்தியசாலைக்கான அடிக்கல்லை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை நாட்டி வைத்தார்.
-அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கில்றோய் பீரிஸ் உள்ளடங்களாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர், ஆயரின் செயலாளர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் இணைந்து அடிக்கல்லினை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.