கனடாவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்
அகில இந்திய வானொலியின் மதுரை நிலையத்தின் முன்னாள் தலைமை இயக்குனரும். பிரபல பட்டி மன்றப் பேச்சாளரும். கனடா உதயன் பத்திரிகை நிறுவனத்தின் சார்பில் பல தடவைகள் கனடாவிற்கு அழைக்கப்பெற்று கௌரவிக்கப்பெற்றவரும். உதயன் சர்வதேச வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவருமான ‘இளசை சுந்தரம்’ அவர்கள் அண்மையில் மதுரையில் காலமானார் என்ற கவலையளிக்கும் செய்தியை அனைவரோடும் பகிர்ந்து கொள்கின்றோம்.
பன்முக ஆற்றலும் நட்பு பாராட்டும் குண இயல்பும் கொண்ட ‘இளசை சுந்தரம’ அவர்களின் மறைவு குறித்து இன்னும் அறிந்து கொள்ளாத நண்பர்களுக்காகவும் ‘உதயன்’ சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காகவும் இந்த தகவலை இங்கு பதிவு செய்கின்றோம்.
-கனடா உதயன் ஆசிரிய பீடம்