புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இரனைப்பாலயம் றோ.த.க படசாலை,ஆனந்தபுரம் அ.த.க பாடசாலை,முத்தையன்கட்டு அ.த.க பாடசாலை மற்றும் கச்சிலைமடு பண்டாரவன்னியன் மாகா வித்தயாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த 130 மாணவர்களுக்கு ரூபா ஒருலட்சம் பெறு மதியான அப்பியாச கொப்பிகள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வழங்கி வைக்கபட்டது.
முல்லைத்திவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கபட்ட உறவகளின் சங்கம் மற்றும் சிவநகர் கிராம அமரா பெண் தலைமை தாங்கும் ஒன்றியங்கள்ட்வட்க்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம் மூலம் முன் வைத்த கோரிக்கைக்கமைவாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இரனைப்பாலயம் றோ.த.க படசாலை,ஆனந்தபுரம் அ.த.க பாடசாலை கல்வி கற்க்கும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களை சேர்ந்த 65
மாணவர்களுக்கும் ஒட்டிசுட்டான் பகுதியில் வைத்து முல்லைத்திவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கபட்ட உறவகளின் சங்கத்தை சேர்ந்த குடும்பங்களின் மாணவர்கள் கல்விகற்க்கும் முத்தையன்கட்டு அ.த.க பாடசாலை மற்றும் கச்சிலைமடு பண்டாரவன்னியன் மாகா வித்தயாலய மாணவர்கள் 65 பேருக்குமாக மொத்தம் 130 மாணவர்களுக்கு ரூபா 1,00,000 பெறுமதியில் கற்றல் உபகரணங்கள் வழங்கபட்டுள்ளன.
இன் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கபட்டோர் சங்கத்தின் உப தலைவி ரஞ்சினிதேவி மற்றும் சிவநகர் கிராம அமரா பெண்கள் தலமை தாங்கும் அமைப்பின் தலைவி தயாளினி ஆகியோர் பாடசாலை உகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.