கனடாவின் முன்னணி வர்த்தகப் பிரமுகர்களில் ஒருவரும் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சரவணபவன் உணவகங்களின் மூன்று கிளைகளை கனடாவில் நிர்வகித்து நடத்தி வருபவரும் கனடாவின் ஆளும் கட்சியான லிபரல் கட்சின் நீண்ட கால சிரேஸ்ட் உறுப்பினரும் தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகள் புரிந்து வருபவருமான கணேசன் சுகுமார் அவர்களின் துணைவியார் ஷீலா சுகுமார் அம்மையார் இன்று சனிக்கிழமை கனடாவில் காலமானார் என்ற செய்தியை அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் அறியத்தருகின்றோம்.
கணக்கியல் துறையில் பல உயர் சான்றிதழ்களைப் பெற்றவராக விளங்கிய ஷீலா சுகுமார் அம்மையார் இலங்கையிலும் கனடாவிலும் பல நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவித்தல்களில் காணலாம்.